🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

துபாயில் நடைபெற்ற ‘தலைவர் தம்பி தலைமையில்’ பட ரசிகர் காட்சி!

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் தயாரிப்பாளர் திரு. கண்ணன் ரவி அவர்களின் தலைமையில் படத்தின் ரசிகர் காட்சி துபாயில் திரையிடப்பட்டது. அதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆனந்தராஜ், காளி வெங்கட் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 

துபாயைச் சேர்ந்த  இந்திய தொழிலதிபர் கே.ஆர் குழுமத்தின் தலைவர் திரு. கண்ணன் ரவி அவர்களின் தயாரிப்பில், ஜீவா நடிப்பில் உருவான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் 2026 பொங்கல் தினத்தன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தை மலையாள திரைப்பட இயக்குநர் நிதிஷ் சகதேவ் இயக்கி உள்ளார்.

இப்படத்தில் நடிகர்கள் இளவரசு, தம்பி ராமையா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். துபாய்  தேரா சிட்டி சென்டர் வளாகத்தில் உள்ள திரையரங்கில் நடந்த ரசிகர் காட்சி நிகழ்ச்சியில், தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான திரு. கண்ணன் ரவி அவர்களின் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ஆனந்தராஜ், ரமேஷ் திலக், காளி வெங்கட் மற்றும் வலைபேச்சு குழுவினர் கலந்துகொண்டு திரைப்படத்தை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியை திருமதி. கலைவாணி ஏற்பாடு செய்திருந்தார்.

அதேபோல் கலாட்டா குடும்பம் அமைப்பு சார்பில் அல் அய்ன், துபாய், ஷார்ஜா, அஜ்மான், ராசல் கைமா, புஜேரா ஆகிய பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் சிறப்பு ரசிகர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முன்பதிவுடன் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கு டி-சர்ட், பாப் கார்ன் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.