துபாயின் அல் கைல் சாலையில் (Al Khail Road) ‘ஸ்கைலைட் மால்’ (Skylight Mall) எனும் புதிய பிரமாண்ட வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. துபாய் ஹோல்டிங் அஸெட் மேனேஜ்மென்ட் அமைப்பின் கீழ் இயங்கும் Dubai Retail நிறுவனம் இந்த வணிக வளாகத்தை உருவாக்குகிறது.
இந்த வணிக வளாகம் 2027-ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

360-க்கும் மேற்பட்ட கடைகள்
சுமார் 1.3 மில்லியன் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இந்த வணிக வளாகத்தில், 360-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் வணிகக் கடைகள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் இடம்பெறவுள்ளன.
அல் கைல் சாலையில் அமையவுள்ள இந்த மால், ஜுமேரா வில்லேஜ் டிரையாங்கிள் (JVT), ஜுமேரா ஐலேண்ட்ஸ், தி ஸ்பிரிங்ஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பெரும் வசதியாக அமையும். மேலும், துபாயின் பிற பகுதிகளில் இருந்தும் எளிதாக வந்து செல்லும் வகையில் இதற்கான போக்குவரத்து இணைப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன.

Dubai Retail நிறுவனத்தின் 58-வது மைல்கல்
ஸ்கைலைட் மாலின் வரவோடு, Dubai Retail நிறுவனம் நிர்வகிக்கும் வணிக வளாகங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மையங்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்கிறது.
ஏற்கனவே பாம் ஜுமேரா மால், இப்ன் பதூதா மால், டிராகன் மார்ட், புளூவாட்டர்ஸ் மற்றும் சோக் மதினாத் ஜுமேரா உள்ளிட்ட பல புகழ்பெற்ற மையங்களை இந்நிறுவனம் வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
