தில்லானா மோகனாம்பாள் மேடை நாடகம்; நடிகர்கள் தேவை 

தமிழ் திரையுலகில் காலத்தால் அழிக்க முடியாத காவியமான ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தைத் தழுவி உருவாகும் புதிய மேடை நாடகத்திற்காக நடிகர்கள் தேர்வு (Casting Call) அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நாடகத்தை Ek-Wam Institute of Performing Arts, மூன்றாம் திரை ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ரூபா பிரபு கிருஷ்ணன் மற்றும் அனீதா ஜெயராமன் வழங்குகின்றனர்.

இலக்கியா மற்றும் ஸ்ரீ ஹரீஷ் (UYIRMEI) ஆகியோரின் நாடக இயக்கத்தில் உருவாகும் இந்த நாடகம், வரும் செப்டம்பர் 2027 அன்று அரங்யேறவுள்ளது.

தேவைப்படும் கதாபாத்திரங்கள் மற்றும் தகுதிகள்:

இந்த நாடகத்தின் முக்கிய மற்றும் துணைக்கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • முதன்மை கதாபாத்திரம் (ஆண்): 1 நபர் (வயது வரம்பு: 35 முதல் 50 வயது வரை)
  • குழுவினர் (துணைக்கதாபாத்திரங்கள்): 9 ஆண்கள், 4 பெண்கள் (வயது வரம்பு: 30 முதல் 65 வயது வரை)

மொழித் திறன் மற்றும் தகுதிகள்:

  • இந்த நாடகத்தில் பங்கேற்கத் தெளிவாகவும், தன்னம்பிக்கையுடனும் தமிழில் பேசும் திறன் கட்டாயமாகும்.
  • மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழி அல்லது கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தத் தனித்துவமான தமிழ் நாடகத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் Google Form (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfq0MIVfEag-pp5iMuAEW3NPG8CCwvvizNN_ZsyJffE8fEvHg/viewform) மூலமாக பதிவு செய்யலாம். 

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 30, 2026
  • நடிகர்கள் தேர்வு நடைபெறும் நாட்கள்: நவம்பர் 14 & 15, 2026
  • குறிப்பு: பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தேர்வு நடைபெறும் நாட்கள் இறுதி செய்யப்படும். மேலும், விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வு நடைபெறும் இடம் பற்றிய விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.