அமீரகத்தில் தனியார் துறை ஊழியர்கள் MOHRE மூலம் தொழிலாளர் புகார் அளிப்பது எப்படி? – முழுமையான வழிகாட்டி!

அமீரகத்தில் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் மனிதவள மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சகம் (MOHRE) எளிமையான புகார் அளிக்கும் நடைமுறைகளை வழங்குகிறது. 

ஊழியர்கள் சம்பளம் வழங்கப்படாதது, பணிநிறைவுப் பலன்கள் (Gratuity) கிடைக்காதது, வேலை ஒப்பந்த விதிமீறல்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், MOHRE அமைச்சகத்திடம் புகார் அளிக்கலாம்.

ஊழியர்களின் புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே பிரச்சனையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சகம் மேற்கொள்ளும். இதன் மூலம், அமீரகத் தொழிலாளர் சட்டத்தின்கீழ் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கவும், வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் வழிவகை செய்யப்படுகிறது.

புகார் அளிப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்

  • MOHRE மூலம் தொழிலாளர் புகார் பதிவு செய்வது முற்றிலும் இலவசமாகும். 
  • இந்தச் சேவை அமீரகத்தில் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
  • நீங்கள் ஒரு Free Zone நிறுவனத்தில் பணியாற்றுகிறீர்கள் என்றால், நேரடியாக அந்தந்த Free Zone அதிகார அமைப்பைத் தொடர்புகொள்ள வேண்டும்.
  • புகார் அளிக்கும் வழிகள்:
    • MOHRE அதிகாரப்பூர்வ இணையதளம் (mohre.gov.ae)
    • ‘MOHRE UAE’ கைபேசி செயலி 
    • 80060 என்ற இலவச ஹாட்லைன் எண்

தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகவல்கள்

புகாரைப் பதிவு செய்வதற்கு முன் பின்வரும் தகவல்களை சேகரித்து வைப்பது அவசியமாகும்

  1. தொழிலாளர் அட்டை எண் (Labour Card Number)
  2. நபரின் குறியீடு (Person Code)
  3. பாஸ்போர்ட் எண் (Passport Number)

இந்த விவரங்களை எவ்வாறு பெறுவது?

  • நேரடிச் சேவை மையம் (Tas’heel): செயலியைப் பயன்படுத்த இயலவில்லை என்றால், உங்களுக்கு அருகில் உள்ள Tas’heel சேவை மையத்திற்குச் சென்று உங்கள் Emirates ID அல்லது பாஸ்போர்ட்டைக் காண்பித்து இந்த விவரங்களைப் பெறலாம்.

ஆன்லைனில் புகார் பதிவு செய்வது எப்படி?

  1. MOHRE இணையதளத்தின் புகார் பதிவு பக்கத்தை அணுகவும்.
  1. உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உங்கள் மொபைலுக்கு வரும் ரகசிய எண்ணை உள்ளிட்டுச் சரிபார்க்கவும்.
  1. பயனர் பிரிவில் ‘Employee’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  1. Labour Card Number, Person Code, Passport Number, Nationality மற்றும் பிறந்த தேதியைச் சரியாக உள்ளிடவும். உங்கள் வேலைவாய்ப்பு சுயவிவரம் திரையில் தோன்றும்.
  1. ‘Add Complaint’ என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  1. உங்கள் பிரச்சனை குறித்த சுருக்கமான தகவல்களை உள்ளிடவும்.
  1. Dropdown Menu-வில் இருந்து உங்கள் புகாரின் சரியான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
    • Overtime Allowance
    • End-of-service Gratuity
    • Maternity / Annual Leave
    • Unlawful Termination
  1. உங்களுக்கு வர வேண்டிய நிலுவைப்பணம் இருந்தால், அந்தத் தொகையைக் குறிப்பிடவும்.
  1. இறுதிச் சரிபார்ப்பிற்கு பின் மீண்டும் OTP-ஐ உள்ளிட்டு புகாரைச் சமர்ப்பிக்கவும்.

புகாரை பதிவு செய்த பின் என்ன நடக்கும்?

  • MOHRE அதிகாரி புகாரை ஆய்வு செய்து, உங்களைத் தொடர்புகொண்டு விவரங்களை உறுதிப்படுத்துவார். பின்னர், பிரச்சனை நீதிமன்றத்திற்குச் செல்லாமல் அமைதியான முறையில் தீர்க்க நிறுவனத்தை/முதலாளியை தொடர்புகொள்வார்.
  • உடனடித் தீர்வு எட்டப்படவில்லை எனில், இரு தரப்பினருக்கும் SMS மூலம் விசாரணைக்கான தேதி அறிவிக்கப்படும்.
  • MOHRE மூலம் பிரச்சனையைச் சுமுகமாகத் தீர்க்க முடியாத பட்சத்தில், இந்த வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும்,
  • வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தேவைப்பட்டால் ஊழியரின் தற்போதைய Work Permit ரத்து செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர் வேறு நிறுவனத்தில் வேலை தேடிக் கொள்ள MOHRE அனுமதி அளிக்கும்.

TAGGED: