துபாயில் நடைபெற்ற ‘ழகரம் கலைத் திருவிழா’வில் அமீரகத் தமிழர்களின் கலை, இலக்கியத் திறமைகள் பல்வேறு போட்டிகள் மூலம் சிறப்பாக வெளிப்பட்டன.
அமீரக வாழ் தமிழர்களின் கலை மற்றும் இலக்கியத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில், துபாயில் ‘ழகரம் கலைத் திருவிழா’ அக்டோபர் 3-ஆம் தேதி மிக விமர்சையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
துபாயில் உள்ள காரமா ஸ்போர்ட்ஸ் பே-வில் (Karama Sports Bay) மாலை 6:30 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தமிழர்களும் அவர்களின் குழந்தைகளும் பெரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
ஆர்.ஜே. ரம்யாவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு Allied Motors நிறுவனம் Title Sponsor-ஆக வழங்கியது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக:
தாதோ மணிகண்டமூர்த்தி வேலாயுதம் – Sky Blue Media
திரு. கமல் – மேலாண் இயக்குநர், Allied Motors
திரு. ஹமீத் யாசின் – தலைவர், IMAN Cultural Centre
திரு. பகவதி ரவி – மேலாண் இயக்குநர், Salwa International Steel Fabrication
திரு. ராபின்சன் – மேலாண் இயக்குநர், Rukn Group of Companies
திரு. ஷா – பிரதிநிதி, செம்மொழி முத்தமிழ் சங்கம்
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழ் மொழியின் பெருமையையும் பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இத்திருவிழாவில், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எனப் பல்வேறு கலை மற்றும் இலக்கியப் போட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக,
- திருக்குறள் போட்டி
- பேச்சுப் போட்டி
- மாறுவேடப் போட்டி
- வினாடி-வினா
- நடனப் போட்டி
ஆகிய போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் நடைபெற்றன. இதில் பங்கேற்ற குழந்தைகள் தங்கள் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட முக்கிய விருந்தினர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற திறமையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.
அமீரக மண்ணில் தமிழ் கலைகளையும் இலக்கியத்தையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் மிக முக்கிய வாழ்வியல் பாலமாக அமைந்த இந்நிகழ்ச்சி, அங்குள்ள தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
