Dubai Shared Housing Rules 2026: புதிய சட்டங்கள் மற்றும் அபராத விவரங்கள்

துபாயில் Shared Housing முறைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் நகராட்சி, நகரின் தூய்மை, பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தைப் பேணுவதுடன், மக்கள் நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ‘Shared Housing’ எனப்படும் பகிர்வு குடியிருப்பு முறைக்கு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தெளிவான விதிமுறைகளை அறிவித்துள்ளது.

2026-ஆம் ஆண்டின் 4-ஆம் எண் சட்ட விதிகளின்படி (Law No. 4 of 2026), இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, பிரம்மச்சாரிகள் (Bachelors) மற்றும் குடும்பங்கள் (Families) தங்குவதற்கான தனித்தனி வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முக்கிய விதிமுறைகள்:

1. தனித்தனி ஒதுக்கீடு:

  • Shared Housing Bachelors-க்கு அல்லது குடும்பங்களுக்கு என ஏதேனும் ஒரு பிரிவினருக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும்.
  • ஒரே வீட்டில் Bachelor-களும் குடும்பங்களும் இணைந்து தங்குவதற்கு முற்றிலும் அனுமதி இல்லை.

2. தனிநபர் இடவசதி:

படுக்கையறையில் தங்கும் ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சம் 5 சதுர மீட்டர் பரப்பளவு இடம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

3. கழிப்பறை வசதி: 

குடியிருப்பில் தங்கும் ஒவ்வொரு 4 பேருக்கு ஒரு கழிப்பறை வசதி கட்டாயம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பிட்ட பகுதிகளில் Bachelor-களுக்கு தடை: 

துபாயின் முக்கிய மற்றும் பரபரப்பான சாலைப் பகுதிகளான:

  • Baniyas Road 
  • Sheikh Zayed Road 
  • Jumeirah Road 
  • Al Wasl Road

ஆகிய பகுதிகளில் Shared Housing முறையில் Bachelors தங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் குடும்பங்கள் மட்டுமே Shared Housing முறையில் தங்க அனுமதி உண்டு.

கூடுதல் வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம்:

  • Bachelor-களுக்கான கட்டிடங்களில் உணவருந்தவும் பொழுதுபோக்கிற்கும் Multi-purpose Hall மற்றும் துணி துவைக்கும்/உலர்த்தும் வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
  • வழக்கமான குறைந்தபட்ச கார் பார்க்கிங் விதிகளிலிருந்து Shared Housing குடியிருப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பேருந்து மற்றும் மிதிவண்டி வசதிகள்:

  • மினி பஸ்கள் வந்து செல்ல ஏதுவான பகுதி அமைக்கப்பட வேண்டும்.
  • கட்டிடத்தில் தங்கும் மொத்த நபர்களில் குறைந்தது 10% பேருக்கு சைக்கிள் பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.

காலக்கெடு மற்றும் அபராத விவரங்கள்:

  • குடியிருப்பு உரிமையாளர்கள் தங்களின் தற்போதைய பகிர்வு குடியிருப்புகளை புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வரும் 2027 செப்டம்பர் 8-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த புதிய விதிகளை மீறுபவர்களுக்கு AED 500 முதல் AED 500,000 வரை அபராதம் விதிக்கப்படும் என துபாய் நகராட்சி எச்சரித்துள்ளது.