அமீரகத்தின் நீல விசா, பச்சை விசா மற்றும் கோல்டன் விசாவை பெற தேவையான தகுதிகள் மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய நன்மைகள்

அமீரகத்தில் நீண்ட காலம் வாழ விரும்புபவர்களுக்கு நீல விசா, பச்சை விசா மற்றும் கோல்டன் விசா என மூன்று தனித்துவமான விசாக்கள் அமலில் உள்ளன. 

நீல விசா 

துபாயில் 2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டின் போது நீல விசா அறிமுகம் செய்யப்பட்டது. இது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

நன்மைகள்

  • 10 ஆண்டுகள் வரை அமீரகத்தில் வாசிக்கலாம். 
  • 180 நாட்கள் அமீரகத்திற்குள் வந்து செல்ல அனுமதி உள்ளது. 
  • நீல வீசாவை பெற சொத்து வாங்கவோ அல்லது பணத்தை முதலீடு செய்யவோ தேவையில்லை.

யார் விண்ணப்பிக்கலாம்?

  • சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள்
  • விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் 
  • பசுமை முறையில் தொழில் செய்ய மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழில்களை மேற்கொள்ள விரும்பும் தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள்.
  • சுற்றுச்சூழல் வல்லுநர்கள்

பச்சை விசா

நாட்டின் குடியேற்ற விதிமுறைகளில் ஒரு பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாக, 2022ஆம் ஆண்டு பச்சை விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசா தொழில் வல்லுநர்கள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 

நன்மைகள்

  • பச்சை விசா அமீரகத்தில் ஐந்து ஆண்டு குடியிருப்பு அனுமதியே வழங்குகிறது. 
  • தன்னை தானே ஸ்பான்சர் செய்ய பச்சை விசா அனுமதிக்கிறது. 
  • வாழ்க்கைத் துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு விசா பெற ஸ்பான்சர் செய்யலாம். 

யார் விண்ணப்பிக்கலாம்?

  • ஃப்ரீலான்ஸர்கள் 
  • சுயதொழில் செய்பவர்கள்
  • சிறப்பு திறமை உள்ளவர்கள்
  • முதலீட்டாளர்கள் 
  • ஏதேனும் வணிகத்தின் கூட்டாளிகள் 

கோல்டன் விசா

அமீரகத்தின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் கோல்டன் விசா, 2019ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இது தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு வழங்கப்படுகிறது.

நன்மைகள்

  • 5 முதல் 10 ஆண்டுகள் வரை அமீரகத்தில் வாசிக்கலாம். 
  • 180 நாட்கள் அமீரகத்திற்குள் வந்து செல்லலாம். இதே 180 நாட்கள் குடியிருப்பு தகுதியை இழக்காமல் வெளிநாட்டில் வசிக்க முடியும்.
  • வாழ்க்கைத் துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு விசா பெற ஸ்பான்சர் செய்யலாம். 

யார் விண்ணப்பிக்கலாம்?

  • ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள்
  • தொழில் முனைவோர்கள் 
  • சிறப்பு திறமை உள்ளவர்கள் 
  • சிறந்த மாணவர்கள் 
  • மருத்துவ பணியாளர்கள் 
TAGGED: