வெற்றி சுடலை நாயகனாக நடிக்கும் “கதிரவன்” திரைப்படத்தின் பூஜை மற்றும் தலைப்பு வெளியீட்டு விழா பிப்.16, 2026 அன்று ஷார்ஜாவில் நடைபெற்றது.
SM புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் ஷியாம் குமார் தயாரிப்பில், அபி பாலகிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குநராகவும், செல்வகுமார் ஒளிப்பதிவாளராகவும், டான் மேக்ஸ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
மேலும், சிவாயதேவ் கலை இயக்குநராக, விஜி சதீஷ் நடன இயக்குநராக, ரம்யா சேகர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளனர். மனு மோகன் ஒப்பனை கலைஞராகவும், டோனி மேக்மைத் VFX கலைஞராகவும், சம்பத் நாராயணன் புகைப்பட கலைஞராகவும் இணைந்துள்ளனர்.
இந்த படத்தில் மணிகண்டன் ஆச்சாரி வர்ஷா பொல்லம்மா, ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, அர்ஜுன் நந்தகுமார், ஸ்மிருதி வெங்கட், நேஹா சக்சேனா, அனு சித்தாரா, சாக்ஷி அகர்வால், ரம்யா சுரேஷ், தமிழ்செல்வி, ஸ்ரீதேவி அணில், அவான் புக்கோத், சினு சித்தார்த், பூர்ணா ரவீந்திரன், அம்ருதா மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் பூஜை நிகழ்வில் இயக்குநர் அபி பாலகிருஷ்ணா, நடிகர் வெற்றி உள்ளிட்ட திரைப்படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது குறித்து நடிகர் வெற்றி, இப்படத்தில் தான் காவல் அதிகாரியாக நடிப்பதாகவும், அந்த கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
