2026-ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்குவதால், சவூதி அரேபியா உம்ரா விசாக்கள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மற்றும் மக்காவிற்குள் நுழைவதற்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
உள்ளடக்கம்
கட்டுப்பாடுகள்:
- 2026 ஏப்ரல் 18 முதல் மே 31 வரை, ‘நுசுக்’ (Nusuk) செயலி மூலம் உம்ரா செய்வதற்கான அனுமதிகள் வழங்கப்பட மாட்டாது.
- ஏப்ரல் 13 திங்கட்கிழமை முதல் மக்கா நகரத்திற்குள் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- மக்காவிலேயே தங்கியிருப்பதற்கான வசிப்பிட அனுமதி (Residency permit/Iqama) உள்ளவர்கள், ஹஜ் செய்வதற்கான அனுமதி உள்ளவர்கள், புனித தலங்களில் வேலை செய்வதற்கான பணி அனுமதி (Work permit) பெற்றவர்கள் மட்டுமே மக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
- உம்ரா விசாவில் சவுதி அரேபியாவிற்கு வந்திருப்பவர்கள், வரும் 2026 ஏப்ரல் 18 சனிக்கிழமைக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவிற்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பிப்ரவரி 25 விசா காலம் முடிவடைந்தவர்களும், ஏப்ரல் 18-க்குள் எவ்வித அபராதமும் இன்றி சர்வதேச விமான நிலையங்கள் வழியாக வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
- ஹஜ் விசா (Hajj Visa) இல்லாத எவரும் மக்காவிற்குள் நுழையவோ அல்லது அங்கு தங்கவோ அனுமதி கிடையாது.
- இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகளும், அபராதங்களும் விதிக்கப்படும் என சவுதி உள்துறை அமைச்சகம் (MOI) எச்சரித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மக்காவிற்குள் நுழைவதற்கான அனுமதியை அப்ஷர் (Absher) அல்லது முகீம் (Muqeem) இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்:
அப்ஷர்: வீட்டுப் பணியாளர்கள், முதலீட்டாளர்கள், பிரீமியம் வசிப்பிட அனுமதி பெற்றவர்கள் மற்றும் வெளிநாட்டினரான குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தலாம்.
முகீம்: மக்காவில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2026-ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணம் தோராயமாக மே 25 முதல் மே 30 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகவே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
