ஈத் அல் அதா; நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 956 கைதிகளை விடுதலை செய்ய அமீரக அதிபர் உத்தரவு!

ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 956 கைதிகளை விடுதலை செய்ய அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள்  உத்தரவிட்டுள்ளார்.

அமீரக சிறை கைதிகள் விடுதலை: 

ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 956 கைதிகளை விடுதலை செய்ய அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள்  உத்தரவிட்டுள்ளார்.

அமீரக அதிபரின் இந்த அறிவிப்பு வெறும் விடுதலையோடு மட்டும் நின்றுவிடவில்லை. விடுதலை செய்யப்படும் கைதிகள் தங்களின் தண்டனைக் காலத்தில் செலுத்த வேண்டியிருந்த அனைத்து விதமான அபராதங்கள் மற்றும் நிதிச் சுமைகளையும் அதிபரே ஏற்றுக்கொண்டு, அவற்றைச் செலுத்த உறுதியளித்துள்ளார். 

துபாயில்  836 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு

அதே போல் துபாயின் ஆட்சியாளரும், துபாய் சிறைகளில் இருக்கும் 836 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

விடுவிப்பதற்கான நோக்கம்: 

இந்த நடவடிக்கை, விடுதலை ஆகும் கைதிகளின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், அவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு, சமுதாயத்தில் மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கும் ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்று துபாயின் ஆட்சியாளர்  மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவின் கீழ் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 836 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இந்த மனிதாபிமான நடவடிக்கை, சிறையில் இருந்து வெளிவரும் கைதிகள் எவ்வித கடனோ அல்லது நிதி நெருக்கடியோ இன்றி, தங்களது புதிய வாழ்க்கையை நிம்மதியாகத் தொடங்க பேருதவியாக இருக்கும். 

இந்த நடவடிக்கை அதிபரின் மனிதாபிமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. கைதிகளின் குடும்பங்கள் மீண்டும் ஒன்றுசேரவும், சமுதாயத்தில் அமைதியும், ஒற்றுமையும், கருணையும் நிலவ வேண்டும் என்ற நோக்கில் இந்த மனிதாபிமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.