இந்திய பாஸ்போர்ட் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு; அமீரகத்திற்கான கட்டண விவரங்களை வெளியிட்ட தூதரகம்!

அமீரகத்தில்  ஜூலை 1 முதல் இந்திய பாஸ்போர்ட் கட்டணங்கள் சுமார் 70% வரை உயர்த்தப்பட்டுள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, 36 பக்க பாஸ்போர்ட்டுக்கு சாதாரண முறைக்கு AED 450, தட்கல் முறைக்கு AED 900 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில்  வாழும் இந்தியர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணங்கள் ஜூலை 1, 2026 முதல் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும், துபாயில் உள்ள இந்திய தூதரகமும் இந்த புதிய கட்டணப் பட்டியலை வெளியிட்டுள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) பாஸ்போர்ட் கட்டணங்களை உலகளவில் உயர்த்தியுள்ளதால், அமீரகத்தில் கட்டணங்கள் சுமார் 70% வரை அதிகரித்துள்ளன. கடைசியாக 2012-இல் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன.

புதிய பாஸ்போர்ட் கட்டண விவரங்கள்  

பெரியவர்களுக்கு 

பாஸ்போர்ட்  வகைசாதாரண சேவை தத்கல் சேவை (Tatkal)
36 பக்கங்கள் (புதிய/புதுப்பித்தல்)AED 450 (முன்பு AED  285)AED  900 (முன்பு AED  855)
60 பக்கங்கள் (புதிய/புதுப்பித்தல்)AED  630 (முன்பு AED  380)AED  1,080 (முன்பு AED  950)

பாஸ்போர்ட் தொலைந்தால் அல்லது சேதமடைந்தால்:


36 பக்கங்கள்: சாதாரண சேவை  AED 900 

தட்கல் AED 1,350

60 பக்கங்கள்: சாதாரண சேவை  AED  1,080 

 தட்கல் AED  1,350

குழந்தைகளுக்கான சலுகைகள் 

18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டணங்கள் குறைவாகவே இருக்கும்

சிறுவர்களுக்கான பாஸ்போர்ட் (36 பக்கங்கள்): சாதாரண கட்டணம் AED 325 | தட்கல் AED  775

8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு (புதிய பாஸ்போர்ட் மட்டும்): 10% தள்ளுபடி உண்டு. 

இதன்படி சாதாரண கட்டணம் AED 295 ஆகவும், தட்கல் கட்டணம் AED   700 ஆகவும் இருக்கும். (பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இந்த தள்ளுபடி கிடையாது).

இதர சேவைகளுக்கான கட்டணங்கள் 

அவசர சான்றிதழ் (Emergency Certificate): AED 60 (தட்கல் கிடையாது)

அடையாள சான்றிதழ் (Certificate of Identity): AED  180 (தட்கல் கிடையாது)

இதர சேவைகள் (PCC, Surrender Certificate, GEP): தலா AED 145.

மேலே குறிப்பிட்டுள்ள அடிப்படை கட்டணங்களுடன், சேவை மையத்தின் கட்டணம் (Service Fee) மற்றும் இந்திய சமூக நல நிதி (ICWF) கட்டணமான AED 8.05 கூடுதலாக வசூலிக்கப்படும்.