உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் மீண்டும் அமீரகம் தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது.
Numbeo Mid-Year 2026 அறிக்கையின்படி, அமீரகத்தின் ஐந்து நகரங்கள் உலகின் முதல் ஆறு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக, அஜ்மான் உலகின் மிகவும் பாதுகாப்பான நகரமாக முதலிடத்தைப் பெற்றுள்ளது.
உலக தரவரிசை
1. அஜ்மான் (UAE)
2. ஆபூதாபி (UAE)
3. ராஸ் அல் கைமா (UAE)
4. ஷார்ஜா (UAE)
5.தோஹா (Qatar)
6.துபாய் (UAE)
முதலிடத்தில் அஜ்மான்!
அஜ்மான் காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷேக் சுல்தான் பின் அப்துல்லா அல் நுஐமி கூறுகையில், இந்த அங்கீகாரம் அமீரக தலைமைத்துவத்தின் தொலைநோக்கு பார்வைக்கும், பாதுகாப்பு கட்டமைப்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களுக்கும் கிடைத்த உலகளாவிய அங்கீகாரம் என்று தெரிவித்துள்ளார்.
“அஜ்மான், The City of Safety”
“அஜ்மான், The City of Safety” என்ற ஸ்மார்ட் பாதுகாப்பு அமைப்பின் கீழ், நகரம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், நேரடி தகவல் பகுப்பாய்வு மற்றும் AI தொழில்நுட்பங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
இந்த அமைப்பு, சாத்தியமான ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து, சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது.
முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
அஜ்மான் காவல்துறை பல்வேறு பாதுகாப்பு முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதில், சுற்றுலா பாதுகாப்பு ரோந்துப் படை (Tourist Patrols), அமன் ரோந்துப் படை, கட்டிட பாதுகாப்பு திட்டம், போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், AI அடிப்படையிலான ஸ்மார்ட் போக்குவரத்து கண்காணிப்பு, நவீன கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள், சமூகக் காவல் பணி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
முதியோர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு காவல் சேவைகள், சமூகக் காவல் திட்டங்கள் மற்றும் பொதுமக்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவை, காவல்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரித்தது, இந்த சாதனைக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பித்துள்ளார்.
முதலீடு, சுற்றுலாவுக்கு கூடுதல் பலம்
இந்த அங்கீகாரம், அமீரகத்தின் பாதுகாப்பு கட்டமைப்புக்கு கிடைத்த உலகளாவிய பாராட்டாக மட்டுமல்லாமல், முதலீடு, சுற்றுலா மற்றும் வாழ்க்கைத் தரத்தில் உலகின் முன்னணி நாடாக அமீரகத்தின் நம்பகத்தன்மையை மேலும் உயர்த்தும்.
இந்த சாதனை ‘We the UAE 2031’ மற்றும் ‘Ajman Vision 2030’ இலக்குகளை முன்னெடுத்துச் செல்லவும் முக்கிய பங்காற்றும் என்றும் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அல் நுஐமி அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
