அமீரகத்தில் வேலை தேடுகிறீர்களா? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வழிகள்!

ஐக்கிய அரபு அமீரகம், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தொழில்முறை நிபுணர்கள் மற்றும் வேலை தேடுபவர்களின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைத் தேட அதிகாரப்பூர்வமான பல வழிகள் உள்ளன. அவற்றை சரியாகப் பயன்படுத்தினால், வேலைவாய்ப்புகளை பாதுகாப்பாகவும் நம்பகமாகவும் அணுக முடியும்.

வேலை தேடுபவருக்கான விசா (Job Seeker Visa)

அமீரகத்தில் வேலை தேடும் வெளிநாட்டவர்கள் Job Seeker Visa-க்கு விண்ணப்பிக்கலாம். இந்த விசா 60, 90 அல்லது 120 நாட்கள் செல்லுபடியாகும். வேலை தேடுவதற்காக நாட்டிற்குள் வர உள்ளூர் Sponsor அவசியமில்லை.

அரசு வேலைவாய்ப்புகள்

அரசுத் துறையில் வேலை பெற விரும்புபவர்கள், மத்திய அரசு மற்றும் ஒவ்வொரு அமீரக அரசின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையதளங்களில் பதிவு செய்து நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

தனியார் நிறுவன வேலைகள்

Bayt, NaukriGulf, Foundit Gulf, Gulf News Careers, Laimoon போன்ற நம்பகமான Job Portal-களில் இலவசமாக பதிவு செய்து, உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Job Fair-கள்

அமீரகத்தில் நடைபெறும் Job Fair-களில் பங்கேற்பதன் மூலம் பல்வேறு நிறுவனங்களை நேரில் சந்தித்து வேலைவாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ளலாம். இது நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.

Recruitment Agency

வேலை தேடுபவர்கள் MoHRE உரிமம் பெற்ற Recruitment Agency-களை மட்டுமே அணுக வேண்டும். வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் நபர்களிடம் Recruitment Agency கட்டணம் வசூலிக்கக் கூடாது. விசா அல்லது மருத்துவ பரிசோதனைக்காக பணம் கேட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நிறுவனங்களின் இணையதளங்கள்

வேலை செய்ய விரும்பும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் உள்ள Careers பக்கத்திலும் வேலைவாய்ப்புகள் வெளியிடப்படுகின்றன. அவற்றின் மூலம் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.

CV மற்றும் Cover Letter-ஐ புதுப்பித்திருப்பது, தொடர்ந்து வேலைவாய்ப்புகளைத் தேடுவது, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Email முகவரியில் இருந்தே வேலைவாய்ப்பு வந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது எல்லாம் முக்கியமானவை. மேலும், உங்கள் திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதும், அமீரகத்தின் பண்பாடு மற்றும் வேலைச் சூழல் குறித்து அறிந்து கொள்வதும் வேலை தேடும் பயணத்திற்கு உதவியாக இருக்கும்.

சரியான வழிமுறைகளைப் பின்பற்றி, அதிகாரப்பூர்வ மற்றும் நம்பகமான தளங்கள் மூலமாக மட்டுமே வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பது பாதுகாப்பானதும் சிறந்ததுமான தேர்வாகும்.

TAGGED: