அமீரக அரசு சேவை கட்டணங்களை செலுத்துவது மேலும் எளிதாகியுள்ளது. MoHRE (தொழிலாளர் அமைச்சகம்) மற்றும் ICP (Federal Authority for Identity, Citizenship, Customs and Port Security) ஆகிய அரசு அமைப்புகள், Tabby நிறுவனத்துடன் இணைந்து புதிய தவணை கட்டண வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன.
எந்த அரசு சேவைகளுக்கு பொருந்தும்?
MoHRE-க்கு செலுத்த வேண்டிய அரசு சேவைக் கட்டணங்கள் மற்றும் நிர்வாக அபராதங்களுக்கும், ICP வழங்கும் Emirates ID, Visa, Residency Permit உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்களுக்கும் இந்த வசதியை பயன்படுத்தலாம்.
எவ்வளவு தொகை வரை?
ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் AED 20,000 வரை தவணை முறையில் செலுத்த முடியும். MoHRE சேவைகளுக்கு 4 முதல் 12 மாதங்கள் வரையும், ICP சேவைகளுக்கு 3 முதல் 12 மாதங்கள் வரையும் தவணை கால அவகாசம் வழங்கப்படுகிறது.
எப்படி பயன்படுத்தலாம்?
MoHRE அல்லது ICP-யின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் தளங்களில் சேவைக்கு விண்ணப்பிக்கும் போது, கட்டணம் செலுத்தும் பகுதியில் Tabby விருப்பத்தைத் தேர்வு செய்து, தங்களுக்கு ஏற்ற தவணை திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த வசதி Tabby-யின் Credit Assessment-க்கு உட்பட்டது.
UAE குடியிருப்பாளர்களுக்கு என்ன பயன்?
Visa, Emirates ID, Residency உள்ளிட்ட அரசு சேவைகளுக்கான கட்டணங்களை ஒரே நேரத்தில் செலுத்த முடியாதவர்களுக்கு, இந்த புதிய வசதி நிதிச் சுமையை குறைக்கும். அரசு சேவைகளை மேலும் எளிதாகவும், டிஜிட்டல் முறையிலும் வழங்கும் அமீரக அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
