கொரானாவுக்கு பின் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு வளர்ச்சி; உலக அளவில் முன்னணி வகிக்கும் UAE!

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலக அளவில் வேலை வாய்ப்புகள் வழங்குவதில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்த நாடுகளில் UAE முன்னணியில் உள்ளது. 

LinkedIn நிறுவனம், அமீரக வெளியுறவு வர்த்தக அமைச்சகத்துடன் இணைந்து தயாரித்த “UAE Economic Graph Report 2026” அறிக்கையை வெளியிட்டுள்ளது. ‘அமீரகத்தின் தொழிலாளர் சந்தை அம்சங்கள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் அமீரகத்தின் வேலைவாய்ப்பு சந்தை வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

அமீரகத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில், உலகின் முன்னணி பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடுகையில், வேலைவாய்ப்புகளை மீட்டெடுப்பதில் அமீரகம் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பெருந்தொற்றுக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், அதற்குப் பிறகும் ஆண்டு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை தொடர்ந்து தக்கவைத்துள்ள சில நாடுகளில் அமீரகமும் ஒன்றாகும்.

2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிராந்திய அளவில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், ஜூன் 2026-ஆம் ஆண்டு தரவுகளின்படி, அமீரகத்தில் வேலைவாய்ப்பு நடவடிக்கைகளும் வெளிநாடுகளில் இருந்து திறமையான பணியாளர்களின் வருகையும் மீண்டும் வேகமெடுத்து, சாதகமான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளன.

ரியல் எஸ்டேட்டில் வேலைவாய்ப்பு வளர்ச்சி

2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அனைத்து துறைகளையும் விட ரியல் எஸ்டேட் துறையிலேயே அதிக வேலைவாய்ப்பு வளர்ச்சி பதிவாகியுள்ளது. கல்வி, கட்டுமானம், சுகாதாரம், நிர்வாகம் மற்றும் ஆதரவு சேவைகள், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட துறைகளும் தேசிய சராசரியை விட அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

அதிக ஊழியர்களை கொண்ட துறைகளின் வரிசையில் தொழில்முறை சேவைகள் துறை 14.5% பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து உற்பத்தித் துறை 2% பங்களிப்புடனும், விருந்தோம்பல் மற்றும் தங்குமிடம் துறை 9.2% பங்களிப்புடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

TAGGED: