துபாயில் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ கண்காட்சி: மத்தியப் பிரதேச முதல்வர் தொடங்கி வைத்தார்!

துபாயில் ‘One District One Product’ என்ற கண்காட்சியை, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தொடங்கி வைத்தார். 

துபாயில் உள்ள தாஜ் துபாய் ஹோட்டலில் நடைபெற்ற ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ (One District One Product) கண்காட்சியை மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தனித்துவமிக்க பாரம்பரியக் கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை உலகரங்கில் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்தக் கண்காட்சி பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்தக் கண்காட்சியில் மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த புகழ்பெற்றப் பாரம்பரியப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 

பெதுல் மாவட்டம் – Bell Metal Craft

அசோக்நகர் மாவட்டம் – Chanderi Handlooms

உஜ்ஜைனி மாவட்டம் – Batik Dyeing Art

கார்கோன் மாவட்டம் – Maheshwari Sarees

குவாலியர் மாவட்டம் – Gwalior Carpets

மத்தியப் பிரதேசத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தையும், உள்ளூர் கைவினைஞர்களின் திறமையையும் போற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. அமீரகம் மற்றும் சர்வதேச சந்தைகளில் உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்குப் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் Vocal For Local மற்றும் Make In India திட்டங்களை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த உலகளாவிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

TAGGED: