இந்தியர்கள் துபாயில் ஐபோன் வாங்கினால் உண்மையில் எவ்வளவு சேமிக்கலாம்? விமானக் கட்டணம், விசா, சுங்க வரி உள்ளிட்ட செலவுகளுடன் முழுமையான கணக்கீடு.
ஐபோன் புதிய மாடல்கள் வெளியாகும் போதெல்லாம், இந்தியர்களிடையே “துபாய் சென்று போன் வாங்கினால் பல்லாயிரம் ரூபாய் மிச்சப்படுத்தலாம்” என்ற பேச்சு எழுவது வழக்கம். துபாயில் விற்பனை வரி (VAT) குறைவு என்பதால் ஐபோன்களின் விலை இந்தியாவை விட கணிசமாகக் குறைவாக இருக்கும்.
ஆனால், விமானக் கட்டணம், சுங்க வரி மற்றும் பிற செலவுகளைக் கணக்கிடும்போது உண்மையிலேயே இது லாபகரமான ஒப்பந்தம்தானா? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
துபாய் vs இந்தியா: நேரடி விலை வித்தியாசம்
துபாயில் ஐபோன்களின் ஆரம்ப விலை இந்தியாவை விட கணிசமாகக் குறைவாக உள்ளது.
| iPhone மாடல் | துபாய் விலை (AED) | இந்திய மதிப்பு (INR) | இந்தியா விலை | நேரடி வித்தியாசம் |
| iPhone 18 Pro (256GB) | AED 5,099 | ₹1,33,221 | ₹1,64,900 | ₹31,679 |
| iPhone 18 Pro Max (256GB) | AED 5,499 | ₹1,43,671 | ₹1,79,900 | ₹36,229 |
மேலோட்டமாகப் பார்த்தால், ஐபோன் 18 புரோ மாடலில் ₹31,000க்கும் அதிகமாகவும், புரோ மேக்ஸ் மாடலில் ₹36,000க்கும் அதிகமாகவும் மிச்சமாவது போல் தோன்றும்.
பயணச் செலவுகளைக் கணக்கிட்டால் என்ன ஆகும்?
ஐபோன் வாங்க மட்டுமே நீங்கள் துபாய் பயணத்தை மேற்கொள்கிறீர்கள் என்றால், அதற்கான செலவுகளைக் கழித்தே ஆக வேண்டும்.
- விமானக் கட்டணம் (இருவழி): தோராயமாக ₹20,000 – ₹25,000
- துபாய் சுற்றுலா விசா (Tourist Visa): தோராயமாக ₹6,000 – ₹7,000
மொத்த பயணச் செலவு ₹30,000 என வைத்துக்கொண்டால்
- iPhone 18 Pro: லாபம் வெறும் ₹1,700 மட்டுமே
- iPhone 18 Pro Max: லாபம் வெறும் ₹6,200 மட்டுமே
இந்திய விமான நிலைய சுங்க வரி விதிமுறைகள்
இந்திய சுங்க விதிகளின்படி, வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் புதிதாகக் கொண்டுவரப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு வரம்பு உள்ளது.
- வரி விலக்கு வரம்பு: ஒருவர் ₹75,000 மதிப்புள்ள பொருட்களைப் பெட்டியில் கொண்டுவர வரி விலக்கு உண்டு.
- கூடுதல் வரி: ₹75,000-க்கு மேல் உள்ள தொகைக்கு 35% சுங்க வரி விதிக்கப்படும்.
உதாரணக் கணக்கீடு (iPhone 18 Pro)
துபாய் விலை: ₹1,33,221
வரி விலக்கு கழித்தது போக மீதித் தொகை: ₹1,33,221 – ₹75,000 = ₹58,221
செலுாத்த வேண்டிய சுங்க வரி (approx. 35%): ₹20,377
சுங்க வரியைச் செலுத்திய பிறகு போனின் மொத்த செலவு: ₹1,53,598.
இதன் மூலம் இந்திய விலையை விட உங்கள் சேமிப்பு ₹11,302 மட்டுமே.
ஐபோன் வாங்குவதற்காக மட்டுமே துபாய் செல்வது சிறிதும் லாபகரமானது அல்ல. விமானக் கட்டணம், விசா மற்றும் சுங்க வரியைக் கணக்கிட்டால், இந்தியாவிலேயே வங்கிச் சலுகைகள்மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் வாங்குவதுதான் புத்திசாலித்தனமான தேர்வு.
ஆனால், நீங்கள் ஏற்கனவே சுற்றுலா அல்லது அலுவல் வேலையாக துபாய் செல்பவராக இருந்தால், அங்கு ஐபோன் வாங்குவது நிச்சயம் ஒரு நல்ல சேமிப்பாக அமையும்.
