துபாயில் 186 பகுதிகளில் புதிய வண்ணக் குறியீட்டிலான தெரு பெயர் பலகைகள் மற்றும் வீட்டு எண் பலகைகள் QR குறியீடுகளுடன் அறிமுகமாகின்றன.
துபாய் அரசு நகரின் முகவரி அமைப்பில் ஒரு புதிய காட்சி அடையாளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் வண்ணக் குறியீடுகள் கொண்ட புதிய தெரு பெயர் பலகைகள் மற்றும் வீட்டு எண் பலகைகள் (House Number Plates) அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
துபாயின் நகர்ப்புற திட்டமிடலுக்கான உயர் குழு (Supreme Committee for Urban Planning), சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் துபாய் நகராட்சியுடன் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கம், குறிப்பிட்ட இடங்களை மக்கள் எளிதில் கண்டறிய உதவுவதும், ஒவ்வொரு பகுதியின் அழகியலை மேம்படுத்துவதுமே ஆகும்.
புதிய தெரு பெயர் பலகைகள் மற்றும் வீட்டு எண் பலகைகள்
இத்திட்டம் துபாயின் 19 மண்டலங்களில் உள்ள 186 பகுதிகளை உள்ளடக்கியது. 2026 ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் தொடங்கி 2030 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த ஆண்டிலேயே (2026) Za’abeel 1, Za’abeel 2, Nad Al Sheba, Al Khawaneej 1 மற்றும் Nazwa ஆகிய பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட புதிய பலகைகள் நிறுவப்படவுள்ளன.

புவியியல் மற்றும் நிலப்பரப்பு அம்சங்களின் அடிப்படையில் 5 வண்ணங்கள் பயன்படுத்தப்படும்; உதாரணத்திற்கு, கடலோரப் பகுதிகளைக் குறிக்க நீல நிறமும், பாலைவன நிலப்பரப்பைக் கொண்ட பகுதிகளைக் குறிக்க தங்க நிறமும்பயன்படுத்தப்படும்.
புதிய வீட்டு எண் பலகைகளில் ‘மக்கானி’ (Makani) எண்களுடன் கூடிய QR குறியீடுகளும் இடம்பெறும். இதைப் பயன்படுத்தி குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் மொபைல் மூலம் முகவரிகளை மிக எளிதாகப் பெற முடியும்.
