ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாடு… அந்த நாட்டுக்குள் மற்றொரு நாடு!

அமீரகம் மற்றும் ஓமான் ஆகிய இரு வளைகுடா நாடுகளுக்கு இடையே உலகின் மிகவும் விசித்திரமான புவியியல் எல்லை அமைப்பு உள்ளது. 

உள்ளடக்கம்

உலக அளவில் நிலப்பரப்புக்காகப் பல நாடுகள் எல்லை மோதல்களில் ஈடுபட்டு வரும் சூழலில், அமீரகம் – ஓமான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பர புரிதலுடனும் இணக்கத்துடனும் தங்களது எல்லைப் பகுதிகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அதன்படி 

மதா (Madha)

அமீரகத்தின் நிலப்பரப்புக்குள்ளேயே மதா (Madha) என்ற சிறிய பகுதி அமைந்திருக்கிறது. சுமார் 93 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நிலப்பகுதி ஓமான் நாட்டிற்குச் சொந்தமானது.

1930-களில் அப்பகுதியில் இருந்த பழங்குடியின தலைவர்களிடம் அமீரகத்தின் ஷார்ஜா பகுதியுடன் இணைய விரும்புகிறார்களா அல்லது ஓமானுடன் இணைய விரும்புகிறார்களா என்று கேட்கப்பட்டபோது, ஓமான் மன்னர் தங்களுக்குச் சிறந்த பாதுகாப்பு தருவார் என்று நம்பி மதா மக்கள் ஓமானுடன் இணைய முடிவெடுத்தனர். இதனால் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் அமைந்த ஓமனின் Enclave பகுதியாக மதா உருவெடுத்தது.

நஹ்வா (Nahwa)

இதிலும் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அமீரகத்திற்குள் அமைந்துள்ள ஓமானின் மதா பகுதிக்குள்ளேயே நஹ்வா (Nahwa) என்ற மற்றொரு சிறிய கிராமம் உள்ளது.

இந்த நஹ்வா கிராமம் அமீரகத்தின் ஷார்ஜா எமிரேட்க்கு சொந்தமானது. அதாவது, அமீரகத்திற்குள் ஓமான் நாட்டின் மதா பகுதி அமைந்திருக்க, அந்த ஓமான் பகுதிக்குள்ளேயே மீண்டும் அமீரகத்தின் நஹ்வா பகுதி அமைந்திருக்கிறது. இது உலகிலேயே அரிதாகக் காணப்படும் ஒரு புவியியல் அமைப்பாகும்.