துபாயில் பேருந்து சேவையில் பெரிய மாற்றம்.. ஜூலை 17 முதல் அமல்

மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, துபாயில் 4 புதிய பேருந்து வழித்தடங்களை வரும் ஜூலை 17 முதல் RTA அறிமுகப்படுத்துகிறது.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மெட்ரோ ரயில் இணைப்பு மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், ஜூலை 17 முதல் 4 புதிய பேருந்து வழித்தடங்களை அறிமுகப்படுத்தவும், 13 தற்போதைய வழித்தடங்களை மாற்றி அமைக்கவும் முடிவு செய்துள்ளது. 

பயணிகளின் தேவை மற்றும் பயண முறைகளை ஆய்வு செய்த பின், துபாயின் குடியிருப்பு பகுதிகள், வணிக மையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்கு இடையேயான இணைப்பை மேலும் எளிதாக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

4 புதிய பேருந்து வழித்தடங்கள்

  • Route 35: International City மற்றும் துபாய் Dubai Silicon Oasis ஆகிய பகுதிகளை இணைக்கிறது. இந்த சேவை பரபரப்பான நேரங்களில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இயங்கும்.
  • Route 85: Al Quoz (Al Khail Gate) பகுதியிலிருந்து Dubai Internet City மெட்ரோ நிலையம் வரை இயங்கும். இந்த சேவை பரபரப்பான நேரங்களில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை இயக்கப்படும்.
  • Route 37A: International City-யிலிருந்து Silicon Oasis Lake வரை 30 நிமிட இடைவெளியில் இயங்கும்.
  • Route 37B: Silicon Oasis Lake – International City இடையே 30 நிமிட இடைவெளியில் இயங்கும்.

மாற்றியமைக்கப்பட்ட 6 வழித்தடங்கள் 

  • Route 27: இனி Al Sukook Street-க்கு பதிலாக, Al Mustaqbal Street வழியாக இயக்கப்படும். இதற்கு மாற்றாக பயணிகள் Route 29-ஐ பயன்படுத்தலாம். 
  • Route 36A மற்றும் 36B:  International City  மற்றும் Dubai Silicon Oasis இடையேயான இந்தச் சேவைகள் நிறுத்தப்படுகின்றன.Academic City மற்றும் Silicon Oasis செல்பவர்கள் புதிய வழித்தடங்களான 37A மற்றும் 37B-ஐப் பயன்படுத்தலாம்.
  • Route 67: இனி Al Ghubaiba பேருந்து நிலையத்திற்குப் பதிலாக, Oud Metha பேருந்து நிலையம் வரை மட்டுமே இயங்கும். இதன் மூலம் மெட்ரோ கிரீன் லைன் இணைப்பு எளிதாகும்.
  • Route 84: இனி Mall of the Emirates வரை செல்லாமல், Insurance Market Bus Stop – தெற்குப் பகுதி வரை மட்டுமே இயங்கும். Dubai Marina முதல் Al Quoz வரை பயணிக்க விரும்பும் பயணிகள் புதிய வழித்தடம் 85-ஐப் பயன்படுத்தலாம்.
  • Route 88: Umm Al Sheif Street-க்கு பதிலாக ONPASSIVE மெட்ரோ பேருந்து நிறுத்தத்தில் (வடக்குப் பகுதி) நிறைவடையும்.
  • Route 96 மற்றும் X94: Al Quoz நோக்கிச் செல்லும் இந்த பேருந்துகள், பயண நேரத்தைக் குறைப்பதற்காக Expo Road பதிலாக Al Yalayis Street  மற்றும் Jebel Ali வழியாக இயக்கப்படும்.

மெட்ரோ இணைப்பு பேருந்தில் 5 மாற்றங்கள் 

  • F06: Nad Shamma வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • F29: Umm Suqeim 3-க்குப பதிலாக Umm Al Sheif பகுதிக்குச் செல்லும்.
  • F36: Al Barsha South 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • F47: Jebel Ali தொழிற்பேட்டையில் உள்ள ஊழியர் தங்குமிடங்களுக்குச் செல்லும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
  • F49: Danube மெட்ரோ நிலையத்திலிருந்து செல்லும் போது இனி Parco Hypermarket பகுதியில் நிற்காது. அதற்குப் பதிலாக பயணிகள் 56, 95A, F47 அல்லது F53 வழித்தடங்களை பயன்படுத்தலாம்.

இதர மாற்றங்கள்

  • C01: மாலை நேரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, Flame Intersection 2 மற்றும் Dnata 2 இடையே இந்த வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
  • X22: Al Quoz தொழிற்பேட்டை நோக்கிச் செல்லும் இந்த விரைவுப் பேருந்து, இனி Business Bay நிறுத்தங்களை தவிர்த்துவிட்டு, நேரடியாக Sheikh Zayed Road வழியாக இயங்கும். Business Bay பகுதியினுள் பயணிக்க விரும்புவோர் F14 மற்றும் F41 பேருந்துகளைப் பயன்படுத்தலாம்.

துபாய் மக்களின் அன்றாடப் பயணத்தை எளிதாக்கவும், பொதுப் போக்குவரத்தை அதிநவீன மற்றும் நிலையான முறையில் கொண்டு சேர்க்கவும் இந்த மாற்றங்கள் பெரிதும் உதவும் என்று RTA தெரிவித்துள்ளது.

TAGGED: