துபாயில் வசிப்பவர்களுக்கு அவசியமான அரசு மற்றும் தனியார் செயலிகள் பற்றிய முழுமையான வழிகாட்டி இது. UAE Pass, போக்குவரத்து, விசா, வங்கி, சுகாதாரம், உணவு டெலிவரி உள்ளிட்ட சேவைகளுக்கு எந்த செயலியை பயன்படுத்த வேண்டும் என்பதை எளிமையாக அறிந்துகொள்ளலாம்.
துபாயில் புதிதாக குடியேறியவராக இருந்தாலும், பல ஆண்டுகளாக வசித்து வருபவராக இருந்தாலும், அன்றாட வாழ்க்கையை எளிதாக்க சில முக்கிய மொபைல் செயலிகள் அவசியம். அரசு சேவைகள், Emirates ID மற்றும் Visa ஆவணங்கள், போக்குவரத்து, டாக்ஸி, பார்க்கிங், Salik, மருத்துவ சேவைகள், வேலைவாய்ப்பு, வங்கி, உணவு டெலிவரி, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தனித்தனி செயலிகள் உள்ளன.
இந்த தொகுப்பில், துபாயில் அதிகம் பயன்படுத்தப்படும் அரசு மற்றும் தனியார் செயலிகள், அவற்றின் முக்கிய அம்சங்கள், எந்த சேவைக்கு எந்த செயலியை பயன்படுத்த வேண்டும், எந்த முறையில் உள்நுழைய வேண்டும் (UAE Pass, மொபைல் எண் அல்லது E-mail) போன்ற அனைத்து முக்கிய தகவல்களையும் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். துபாயில் வசிக்கும் அனைவரும் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டிய பயனுள்ள வழிகாட்டி இது.
1. DubaiNow
320-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் ஒருங்கிணைந்த செயலி. UAE Pass மூலம் எளிதாக உள்நுழைந்து அனைத்து சேவைகளையும் பயன்படுத்தலாம்.
2. Nol Pay
Nol கார்டின் இருப்புத்தொகையை சரிபார்க்க, புதிய கார்டை ஆர்டர் செய்ய, ரீசார்ஜ் செய்ய மற்றும் தொடர்புடைய சேவைகளை UAE Pass மூலம் உள்நுழைந்து எளிதாக பயன்படுத்தலாம்.
3. UAE ICP
Emirates ID மற்றும் Visa ஆவணங்களை பதிவிறக்கம் செய்யவும், பல்வேறு Visa சேவைகளைப் பெறவும் UAE Pass மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
4. Dubai Police
விபத்துகளைப் புகாரளிக்க, போக்குவரத்து அபராதங்களைச் செலுத்த மற்றும் SOS மூலம் அவசர உதவியைப் பெற UAE Pass மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
5. RTA Dubai
டாக்சி முன்பதிவு, பார்க்கிங் கட்டணம் செலுத்த, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க, அபராதம் செலுத்த மற்றும் மெட்ரோ நேரங்களை அறிய UAE Pass மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
6. GDRFA Dubai
துபாய் Visa, குடியிருப்பு (Residency) சேவைகள் மற்றும் நுழைவு அனுமதி (Entry Permit) தொடர்பான சேவைகளை UAE Pass மூலம் உள்நுழைந்து பெறலாம்.
7. MOHRE
வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் சேவைகள், பணி ஒப்பந்தத்தைச் சரிபார்க்க, தொழிலாளர் புகார்களைப் பதிவு செய்ய UAE Pass மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
8. DEWA
மின்சாரம் மற்றும் குடிநீர் சேவைகளை நிர்வகிக்க, கட்டணங்களைச் செலுத்த மற்றும் பயன்பாட்டைக் கண்காணிக்க UAE Pass மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
9. Dubai REST
ரியல் எஸ்டேட் மற்றும் வாடகை சேவைகள், இஜாரி பதிவு மற்றும் சொத்து ஒப்பந்தங்களை நிர்வகிக்க UAE Pass மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
10. Dubai Health Authority
துபாய் சுகாதார சேவைகளைப் பெற, மருத்துவர் சந்திப்புகளை முன்பதிவு செய்ய மற்றும் மருத்துவ சேவைகளை நிர்வகிக்க UAE Pass மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
11. Dubai Customs
இறக்குமதி – ஏற்றுமதி சேவைகளைப் பெற, சரக்குகளின் நிலையை கண்காணிக்க UAE Pass மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
12. Dubai Municipality
நகராட்சி மற்றும் பொது சேவைகளை பெற, நகரம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் புகார்களை UAE Pass மூலம் உள்நுழைந்து தெரிவிக்கலாம்.
13. Salik
Salik கணக்கை ரீசார்ஜ் செய்ய, இருப்புத் தொகையை சரிபார்க்க, பயண விவரங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை வரலாற்றைப் பார்க்க UAE Pass மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
14. Dubai Careers
துபாய் அரசுத் துறை வேலைகளுக்கு விண்ணப்பிக்க, வேலை விண்ணப்ப நிலை மற்றும் நேர்காணல் தொடர்பான தகவல்களை அறிய UAE Pass மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
15. Parkin
பொது பார்க்கிங் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த, அருகிலுள்ள பார்க்கிங் இடங்களைக் கண்டறிய UAE Pass மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
16.Visit Dubai
துபாயின் சுற்றுலா தலங்கள், நிகழ்ச்சிகள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பயணத் தகவல்களை அறிய மின்னஞ்சல் மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
17. Ministry of Interior
போக்குவரத்து அபராதங்கள் செலுத்த, ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகளை பெற, காவல்துறை, பாஸ்போர்ட் மற்றும் பிற அரசு சேவைகளை பயன்படுத்த UAE Pass மூலம் உள்நுழையலாம்.
18. Bus On Demand
பகிரப்பட்ட பேருந்து பயணங்களை முன்பதிவு செய்யவும், பேருந்தின் இருப்பிடம் மற்றும் பயண விவரங்களைக் கண்காணிக்கவும் மின்னஞ்சல் மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
19. KHDA
துபாயிலுள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்களை அறிய, இடம், கட்டணம் மற்றும் கல்வித் தரத்தின் அடிப்படையில் பள்ளிகளைத் தேடி ஒப்பிடலாம்.
20. UAE PASS
ஒரே UAE Pass கணக்கின் மூலம் அரசு, வங்கி, டெலிகாம் உள்ளிட்ட சேவைகளை அணுகலாம். மேலும் Emirates ID, Visa, Driving Licence உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டலாக சேமித்து பகிரலாம்.
21. S’hail
துபாய் பொதுப் போக்குவரத்தில் பயணத்தைத் திட்டமிட, பேருந்து வழித்தடங்கள் மற்றும் நிறுத்தங்களை கண்டறிய UAE Pass மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
22. Bolt | Yango | Zed | Careem (Hala)
அரசு அங்கீகாரம் பெற்ற துபாய் டாக்ஸியை Bolt, Yango, Zed மற்றும் Careem (Hala) செயலிகள் மூலம் முன்பதிவு செய்யலாம். மின்னஞ்சல் மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
Click Here to Download – Yango
Click Here to Download – Careem (Hala)
23. e& | du | Virgin Mobile
e&, du, Virgin Mobile ஆகியவை அமீரகத்தின் முக்கிய தொலைத்தொடர்பு சேவை செயலிகள். மொபைல் எண் மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
Click Here to Download – Virgin Mobile
24. Dubai Calendar
துபாயில் நடைபெறும் கச்சேரிகள், திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் அருகிலுள்ள நிகழ்ச்சிகளை அறிய மின்னஞ்சல் மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
25. Deliveroo | Careem | Noon | Talabat | Keeta
Deliveroo, Careem, Noon, Talabat மற்றும் Keeta செயலிகள் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம். மின்னஞ்சல் மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
Click Here to Download – Deliveroo
Click Here to Download – Careem
Click Here to Download – Talabat
Click Here to Download – Keeta
26. BAYUT, PROPERTY FINDER, DUBIZZLE
இந்த செயலிகளில் வீடு, அடுக்குமாடி குடியிருப்பு அல்லது அலுவலகங்களை வாடகைக்கு எடுக்க மற்றும் விற்பனைக்கு வாங்குவது குறித்து அறியலாம். மின்னஞ்சல் மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
Click Here to Download – BAYUT
Click Here to Download – PROPERTY FINDER
Click Here to Download – DUBIZZLE
27. Emirates NBD | ADCB Hayyak | FAB Mobile | Mashreq
இந்த செயலிகள் மூலம் வங்கி சேவைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். மின்னஞ்சல் மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
Click Here to Download – Emirates NBD
Click Here to Download – ADCB Hayyak
Click Here to Download – FAB Mobile
Click Here to Download – Mashreq
28. Botim | GoChat Messenger
Botim மற்றும் GoChat Messenger செயலிகள் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளவும், செய்திகளை அனுப்பவும் முடியும். மொபைல் எண் மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
Click Here to Download – Botim
Click Here to Download – GoChat Messenger
29. Etihad Credit Bureau
கிரெடிட் ஸ்கோர், கிரெடிட் ரிப்போர்ட் மற்றும் பரிவர்த்தனை விவரங்களை அறிய UAE Pass மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
30. Ministry of Interior
போக்குவரத்து அபராதம் செலுத்த, வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சேவைகளை UAE Pass மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
