காலணிகள், பெல்ட்கள் அகற்ற தேவையில்லை; துபாய் விமான நிலையத்தில் அதிநவீன 3D ஸ்கேனர்கள் அறிமுகம்!

துபாய் விமான நிலையத்தில், அதிநவீன பாதுகாப்பு ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டு வருவதாக துபாய் விமான நிலைய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம், லேப்டாப்கள் மற்றும் திரவப் பொருட்களை பைகளில் இருந்தபடியே பார்க்க முடியும். எனவே, பயணிகளின் பாதுகாப்பு சோதனை நேரம் குறையும்.

புதிய அதிநவீன ஸ்கேனர் இயந்திரங்கள்

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) பயணிகள் தங்களது காலணிகள், பெல்ட்கள், மடிக்கணினிகள் மற்றும் திரவப் பொருட்களை பைகளில் இருந்து வெளியே எடுக்க தேவையில்லாத புதிய அதிநவீன ஸ்கேனர் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

எளிமையான பாதுகாப்புத் தணிக்கை:

மேம்படுத்தப்பட்ட 3D தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த புதிய ஸ்கேனர்கள் மூலம், பயணிகள் தங்களின் மடிக்கணினிகள் மற்றும் திரவங்களை பைக்குள்ளேயே வைத்திருக்கலாம். இதன் மூலம் பாதுகாப்பு சோதனைகள் மிக விரைவாகவும் எளிதாகவும் முடியும்.

துபாய் விமான நிலையங்களின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) போல் கிரிஃபித்ஸ் (Paul Griffiths), பழமையான சிரமமான முறைகளுக்கு மாற்றாக இந்த புதிய இயந்திரங்கள் அனைத்து முனையங்களிலும் படிப்படியாகப் பொருத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்மித்ஸ் டிடெக்ஷன் (Smiths Detection) நிறுவனம் புதிய பாதுகாப்பு ஸ்கேனிங் இயந்திரங்களையும், எமராட்டெக் (EmaratTech) நிறுவனம் புதிய குடிவரவு தொழில்நுட்பத்தையும் வழங்கி வருகின்றன.

முனையம் 1-ல் புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட பகுதி விரைவில் திறக்கப்படவுள்ளது.

இங்கு உலகத் தரம் வாய்ந்த ஆடை மற்றும் சில்லறை விற்பனை அங்காடிகள் அமையவுள்ளன. இந்த மாற்றங்கள் மூலம் விமான நிலையத்தில் பயணிகளின் காத்திருப்பு நேரம் பெருமளவில் குறையும்.

TAGGED: