குளோபல் வில்லேஜ் சீசன் நீட்டிப்பு முதல் இந்திய பிரதமர் மோடி வருகை வரை;  அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

குளோபல் வில்லேஜ்ஜின் சீசன் மே 31 வரை நீட்டிப்பு 

குளோபல் வில்லேஜ்ஜின் தற்போதைய சீசன் ஈத் அல் அதா விடுமுறை வரை, அதாவது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. AED 99 ‘வொண்டர் பாஸ்’ மூலம் கார்னிவல் பகுதியில் உள்ள அனைத்து ரைடுகளையும் ஒரு நாள் முழுவதும் அன்லிமிட்டெடாக அனுபவிக்கலாம்.

குளோபல் வில்லேஜ்  வார இறுதி நாட்களில் (வெள்ளி, சனி) அதிகாலை 1 மணி வரையிலும், வார நாட்களில் நள்ளிரவு வரையிலும் செயல்படும். டொராண்டோ டொர்னாடோ, கேப் கிளைடர்ஸ் உட்பட 5 புதிய த்ரில்லான விளையாட்டுகள் இந்த சீசனில் சேர்க்கப்பட்டுள்ளன.

உலகின் முதல் AI பேருந்து நிலையம் 

துபாயின் Mall of the Emirates பகுதியில் AI தொழில்நுட்பத்தில் இயங்கும் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பயணிகளுக்கு பேருந்து, மெட்ரோ மற்றும் டாக்ஸி சேவைகள் குறித்து 24/7 சேவைகள் வழங்கப்படுகின்றன.

துபாயின் Mall of the Emirates பகுதியில், 147 சதுர மீட்டர் பரப்பளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் பேருந்து நிலையத்தை துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) திறந்துள்ளது. 

உலகின் முதல் AI தொழில்நுட்ப பேருந்து நிலையமாக கருதப்படும் இங்கு, 20 பயணிகள் அமரக்கூடிய இட வசதியும், பேருந்து ஓட்டுநர்களுக்கான ஓய்வறையும் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், பயண திட்டமிடல், வாடிக்கையாளர் ஆதரவு, தொலைந்த மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான சேவைகள், மற்றும் RTA வாடிக்கையாளர் சேவை மையத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியுடன் மெய்நிகர் உதவியாளரை கொண்ட ஸ்மார்ட் கியோஸ்கும் நிறுவப்பட்டுள்ளது.

Unlimited வாட்டர் டாக்சி பாஸ் 

துபாய் வாட்டர் டாக்சியில் AED 25-க்கு ‘All-Day Pass’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாஸை பயன்படுத்தி, ஒருநாள் முழுவதும் BM1 மற்றும் BM3 வழித்தடங்களில் உள்ள நிலையங்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் இறங்கி மீண்டும் ஏறிக்கொள்ளலாம்.

துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாய் வாட்டர் டாக்சியில் ‘All-Day Pass’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாஸின் விலை AED 25 ஆகும். 

இந்த பாஸை பயன்படுத்தி, ஒருநாள் முழுவதும் துபாய் மெரினாவில் உள்ள BM1 மற்றும் BM3 வழித்தடங்களில் உள்ள 6 நிலையங்களில் வரம்பற்ற முறையில் பயணிக்கலாம்.

தனியார் பள்ளிகளுக்கு 10 நாட்கள் ஈத் விடுமுறை 

ஷார்ஜாவில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மே 25 முதல் 28 வரை ஈத் அல் அதா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மே 22 – 24 மற்றும் மே 29- 31 ஆகிய வார இறுதி விடுமுறைகளுடன் சேர்த்து மாணவர்களுக்கு மொத்தம் 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

துபாயை தொடர்ந்து, ஷார்ஜாவில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் மே 25 முதல் 28 வரை ஈத் அல் அதா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்கும் என்று தனியார் கல்வி ஆணையம் (SPEA) தெரிவித்துள்ளது.

அமீரகம் வந்த இந்திய பிரதமருக்கு உற்சாக வரவேற்பு 

அரசுமுறை பயணமாக அமீரகம் வந்துள்ள இந்திய பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அன்பான வரவேற்பு மற்றும் கனிவான உபசரிப்பிற்காக, அமீரக அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

ஐந்து நாடுகளுக்கான அரசுமுறை பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் முதல் கட்டமாக அமீரகம் வந்தடைந்தார். அபுதாபியில் அவரை அமீரக அதிபர் ஷேக் முகமது அவர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றார். 

இதுகுறித்து X தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, எரிசக்தி, முதலீடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியா மற்றும் அமீரகம் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் ஆலோசனைகளுக்கு ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

TAGGED: