அல் மம்சார் கடற்கரை  மீண்டும் திறப்பு முதல் மில்லினியர் ஆன தமிழ் பெண் வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள் !

நெருக்கடியிலும் துபாய் விமான நிலையம் சாதனை

பிராந்தியப் போர் பதற்றத்தால் வான்வெளிப் பாதைகள் பாதிக்கப்பட்ட நிலையிலும், துபாய் விமான நிலையம் (DXB) 6 மில்லியன்  பயணிகளைக் கையாண்டுள்ளது.

பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், துபாய் விமான நிலையம் சுமார் 6 மில்லியன்  பயணிகளைக் கையாண்டு தனது உலகளாவிய இணைப்பைத் தக்கவைத்துள்ளது.

ஈரான் தாக்குதலை முறியடிக்கும் அமீரகம்

அமீரக வான் பாதுகாப்பு படை, ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை இடைமறித்து முறியடித்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கேட்கும் சத்தங்கள், தாக்குதல்களை தடுத்து அழிக்கும் நடவடிக்கைகளின் விளைவாகும் என  அமீரக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அமீரக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வான் பாதுகாப்பு படை ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை இடைமறித்து முறியடித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கேட்கும் சத்தங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளின் விளைவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் மம்சார் கடற்கரை  மீண்டும் திறப்பு  

24 மணி நேரமும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிரத்யேக கடற்கரை, மிதக்கும் நடைபாதை, நீர் விளையாட்டுகள்  உள்ளிட்ட வசதிகளுடன்  துபாயின் அல் மம்சார் கடற்கரை AED 500 மில்லியன்  செலவில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  

இக்கடற்கரையின் லாகூன் பகுதியில் இரவு நேர நீச்சல் வசதியும், கார்னிச் பகுதியில் உலகின் முதல் 24 மணி நேரமும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிரத்யேக கடற்கரையும் உள்ளன.

 5.5 கி.மீ நீள மிதிவண்டி பாதை, பாடெல் (Padel), வாலிபால் மைதானங்கள் மற்றும் கயாக்கிங் போன்ற நீர் விளையாட்டுகளும் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் சிறப்பு நீச்சல் நாற்காலிகள் மற்றும் சாய்தளப் பாதைகள் (Ramps) அமைக்கப்பட்டுள்ளன. 

மில்லினியர் ஆன தமிழ் பெண் 

அமீரகத்தில் 14 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த சைதன்யா குமாரி, பிக் டிக்கெட்டில் AED 1 மில்லியன் பரிசுத் தொகையை வென்றுள்ளார். 


தமிழ்நாட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான சைதன்யா குமாரி, அமீரகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இதுவரை ஐந்து முறை பிக் டிக்கெட் வாங்கியுள்ள இவர், ஆறாவது முறையாக வாங்கிய டிக்கெட்டின் மூலம் AED 1 மில்லியன் பரிசுத் தொகையை பெற்றுள்ளார். 

இந்த பரிசுத் தொகையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தனது பெற்றோருடன் ஆலோசிக்க உள்ளதாகவும் சைதன்யா தெரிவித்துள்ளார்.

எமிரேட்ஸ் ஊழியர்களுக்கு 20 வார சம்பளம் போனஸ் 

2025-26 நிதியாண்டில் AED 24.4 பில்லியன் லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து, எமிரேட்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்தை போனஸாக வழங்கியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத சவாலான சூழ்நிலைகள் நிலவிய போதிலும், 2025-26 நிதியாண்டில் AED 24.4 பில்லியன் லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து, எமிரேட்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்தை போனஸாக வழங்கியுள்ளது.

 எமிரேட்ஸ் ஏர்லைன் மற்றும் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 2026 நினைவிலிருந்து மறைந்துவிடலாம். ஆனால் உங்கள் (ஊழியர்கள்) வீரத்தையும் அபாரமான மனவுறுதியையும் நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.