🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

துபாய் சுற்றுலா வரப்போறீங்களா? 48 மணி நேரத்திற்குள் விசா வழங்க அரசு அறிவிப்பு!

துபாய்க்கு சுற்றுலா வர விரும்பும் பயணிகளுக்கான ஒற்றை நுழைவு சுற்றுலா விசா நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு, விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் விசா வழங்கப்படும் என்று துபாய் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA)  தெரிவித்துள்ளது.

தேவையான அனைத்து விண்ணப்ப நடைமுறைகளையும் ஆவணங்களையும் சமர்ப்பித்த 48 வேலை மணி நேரத்திற்குள் இந்த விசா வழங்கப்படும் என்று துபாய் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

துபாய் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா நிறுவனங்கள் மூலமாகப் பயணிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த நிறுவனங்கள் பயணிகளுக்கு எளிமையான மற்றும் விரைவான சேவையை வழங்குகின்றன.

தேவையான ஆவணங்கள்:

  • விண்ணப்பதாரரின் தற்போதைய புகைப்பட நகல் 
  • பாஸ்போர்ட்டின் நகல் 
  • சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனில், அவர்களின் நாட்டின் தேசிய அடையாள அட்டை (National ID).

கூடுதல் சிறப்பம்சங்கள்:

அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், தேவையான ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், விண்ணப்பித்த சில மணி நேரங்களிலேயே விசா ஒப்புதல் பெறப்படுகிறது. சிலருக்கு 2 முதல் 3 மணி நேரத்திற்குள்ளேயே விசா கிடைத்துவிடுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலமும், விசா நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலமும், உலகளவில் துபாயைச் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக இந்த விரைவான விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

TAGGED: