5,000 குடும்பங்களுக்கு பேரீச்சம்பழம்!
அமீரகத்தின் பாரம்பரிய பேரீச்சம்பழ அறுவடைப் பருவமான Al Qayz-ஐ முன்னிட்டு, துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட உள்ளன.
அமீரக உணவு வங்கி (UAE Food Bank), துபாய் நகராட்சி, சமூக வளர்ச்சி ஆணையம் (CDA), ஹம்தான் பின் முகமது பாரம்பரிய மையம், உள்ளூர் பண்ணைகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இதைச் செயல்படுத்துகின்றனர்.
புதிய பேரீச்சம்பழங்களை மக்களுடன் பகிர்வதோடு மட்டுமல்லாமல், அமீரக கலாச்சாரம், விருந்தோம்பல் மற்றும் சமூக ஒற்றுமை போன்ற பாரம்பரிய மதிப்புகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கமும் இதற்கு உள்ளது.
அமீரகத்தின் முதல் Payment Card
அமீரகம் தனது முதல் தேசிய கட்டண அட்டையான Jaywan-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதையடுத்து, Jaywan வகை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை அமீரக வங்கிகள் விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளன.
அமீரகத்தில் பணப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், அமீரக மத்திய வங்கியின் கீழ் இயங்கும் Al Etihad Payments நிறுவனம் Jaywan என்ற தேசிய கட்டண அட்டையை (National Payment Card) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, First Abu Dhabi Bank (FAB) தனது வாடிக்கையாளர்களுக்கு Jaywan டெபிட் கார்டுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், Jaywan கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயணம், ஷாப்பிங், உணவகங்கள் மற்றும் வாழ்க்கைமுறை (Lifestyle) சேவைகளுக்குப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட வரிசையில் இந்தியர்கள்
பாஸ்போர்ட், விசா சேவைகளை தற்காலிகமாக அல் ஹிந்த் நிறுவனமே வழங்கும் அறிவிக்கப்பட்டதால், அல்ஹிந்த் மையங்களில் சேவையைப் பெற ஜூலை 22 அன்று காலை, இந்தியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்திருந்தனர்.
கடந்த சில வாரங்களாக இந்தியத் தூதரகமே நேரடியாக பாஸ்போர்ட் சேவைகளை வழங்கியதால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர். தற்போது ‘அல்ஹிந்த்’ நிறுவனம் இந்தச் சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக துபாயில் உள்ள அல்ஹிந்த் மையத்தில் சேவை பெற இன்று காலை முதலே ஏராளமான இந்தியர்கள் வரிசையில் திரண்டனர்.
அபுதாபியில் ஆரோக்கிய புரட்சி
அபுதாபியில் சூப்பர் மார்க்கெட்டுகளின் நுழைவு வாயில், பில் கவுண்டர்களில் சாக்லேட், கூல் ட்ரிங்க்ஸ் போன்ற ஆரோக்கியமற்ற உணவு பொருட்களை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் மார்க்கெட்டுகளில் வாடிக்கையாளர்களை கவரும் ‘டெம்ப்டேஷன் ஜோன்’ (Temptation Zones) என்று அழைக்கப்படும் இடங்களில் இருந்து ஆரோக்கியமற்ற உணவு பொருட்களை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி அரசு ‘ஆரோக்கியமான வாழ்க்கை திட்டம்’ (Abu Dhabi Healthy Living programme) என்ற புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பில்லுக்காக காத்திருக்கும் நேரத்தில் தூண்டுதலின் பேரில் (Impulse buying) தேவையில்லாமல் ஆரோக்கியமற்ற உணவுகளை வாங்குவதையும், வீண் செலவுகளையும் தடுக்கலாம்.
இனி அபராதங்களை Instalment-ல் செலுத்தலாம்
அமீரக குடியிருப்பாளர்கள், மனிதவள மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சகத்திற்கு (MoHRE) செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் அபராதங்களை, MoHRE-வின் டிஜிட்டல் தளங்களில் உள்ள Tabby சேவை வாயிலாகத் தவணை முறையில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீரக குடியிருப்பாளர்கள்வேண்டிய கட்டணங்கள் மற்றும் அபராதங்களை Tabby என்ற சேவை வாயிலாகத் தவணை முறையில் செலுத்தலாம்.
4 முதல் 12 மாதங்கள் வரை கட்டணங்களைப் பிரித்துச் செலுத்தலாம். ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக AED 20,000 வரை செலுத்தலாம். MoHRE இணையதளம் வழியாகப் பணப்பரிவர்த்தனை செய்யும்போது, ‘Tabby’ என்ற சேவையை தேர்வு செய்து தவணை முறையை பயன்படுத்தலாம்.
