அமீரகத்தில் இந்திய பாஸ்போர்ட் சேவைகளை தற்காலிகமாக வழங்க அல்ஹிந்த் நிறுவனத்திற்கு அனுமதி; விண்ணப்பிப்பது எப்படி?

அமீரகத்தில் உள்ள இந்தியர்களுக்கான பாஸ்போர்ட், விசா சேவைகளை இன்று முதல் அல் ஹிந்த் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம்  வழங்குகிறது,  இந்நிறுவனம் அமைத்துள்ள 16 இந்திய தூதரக சேவை மையங்கள் (ICACs) மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். 

பாஸ்போர்ட் சேவைகளுக்கு அல்ஹிந்த் நிறுவனம்:

2026 ஜூலை 22 முதல் அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் பாஸ்போர்ட்,  விசா, சான்றிதழ் சரிபார்ப்பு (Attestation) மற்றும் இதர சேவைகள் ‘Al Hind Tours & Travels’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. டெண்டர் வழக்கில் தீர்வு கிடைத்ததைத் தொடர்ந்து, இந்தத் தற்காலிக ஏற்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது. 

இனி அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் அல்லது துபாயில் உள்ள துணைத் தூதரகத்தில் நேரடியாகப் பாஸ்போர்ட்/சான்றிதழ் சேவைகள் வழங்கப்படாது. நியமிக்கப்பட்ட 16 அல்ஹிந்த் மையங்களுக்குத்தான் (ICAC) செல்ல வேண்டும்.  

அப்பாயிண்ட்மென்ட் (Appointment):

விண்ணப்பதாரர்கள் consularsevainuae.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். தினமும் காலை 9:00 மணி மற்றும் இரவு 9:00 மணிக்கு அப்பாயிண்ட்மென்ட் Slot-கள் வெளியிடப்படும்.

மையங்கள் அமைந்துள்ள இடங்கள்

அபுதாபி (6 மையங்கள்): அல் தானா (Al Danah), அல் ரீம் தீவு (Al Reem Island), முசாஃபா (Musaffah), மதினாத் சயீத் (Madinat Zayed), கயாதி (Ghayathi), அல் ஐன் (Al Ain).

துபாய் (2 மையங்கள்): பர் துபாயில் உள்ள UW மால் (12,000 சதுர அடியில் 45 கவுண்டர்களுடன் மிகப்பெரிய மையம்) மற்றும் துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் (DIP).

ஷார்ஜா (2 மையங்கள்): அல் மஜாஸ் (Al Majaz) மற்றும் ரோலா (Rolla).

அஜ்மான் (அல் ஜுர்ஃப்)

ஃபுஜைரா (அல் ஃபசீல்)

உம் அல் குவைன் (அல் ரம்லா)

கோர்ஃபக்கான் (ஷேக் காலித் ரோடு)

கல்பா (இந்தியன் சோஷியல் அண்ட் கல்சரல் கிளப்)

ராஸ் அல் கைமா (அல் மாமூரா ரோடு)

மையங்களின் வேலை நேரம்:

மையங்கள் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இயங்கும்.

அப்பாயிண்ட்மென்ட் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக மட்டுமே மையத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும்.

சேவைக் கட்டணம் (Service Charge):

இந்திய அரசு கட்டணத்துடன் சேர்த்து, சேவை வழங்கி நிறுவனத்தின் கட்டணமாக AED 19 (VAT உட்பட) வசூலிக்கப்படும். இந்த AED 19 கட்டணத்திலேயே படிவம் நிரப்புதல், புகைப்படம் எடுத்தல், டைப்பிங், உள்ளூர் கூரியர், பிரிண்ட் அவுட் மற்றும் ஜெராக்ஸ் போன்ற துணை சேவைகளும் அடங்கும்.

முன்பதிவு இல்லாத நேரடி வருகை (Walk-in Services):

  • தட்கல் பாஸ்போர்ட் (Tatkal Passport)
  • புதிதாக பிறந்த குழந்தைகள் (New-born cases)
  • அவசர சான்றிதழ் (Emergency Certificate)
  • மூத்த குடிமக்கள் (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்)

மேற்கண்ட பிரிவினருக்கு அப்பாயிண்ட்மென்ட் இன்றி நேரடி வருகை அடிப்படையில் (First-come, first-served) சேவைகள் வழங்கப்படும்.