கார் பிரியர்கள், இசை ஆர்வலர்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்றாக இணைந்து மகிழும் வகையில் The Motor Show Sharjah திருவிழா, ஷார்ஜாவின் பிரசித்தி பெற்ற கடற்கரை மற்றும் நீர்முனைப் பகுதிகளில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க பார்வையாளர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.
மாற்றியமைக்கப்பட்ட பிரத்யேக கார்கள் (Modified Cars) மற்றும் அதிவேக திறன் கொண்ட கார்களின் (Performance Cars) கண்கவர் காட்சி, நேரலை இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கு உகந்த பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் கார்ட்டூன் கதாபாத்திரங்களின் (Mascots) நிகழ்ச்சிகள் என அனைத்து வயதினரையும் கவரும் வண்ணம் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மோட்டார் ஷோ நடைபெறும் நாட்கள் மற்றும் இடங்கள்
மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை பின்வரும் தேதிகளில் நிகழ்வுகள் நடைபெறும்:
- 14 நவம்பர் 2026 – அல் ஹீரா பீச் (Al Heera Beach)
- 12 டிசம்பர் 2026 – அல் மஜாஸ் வாட்டர்பிரண்ட் (Al Majaz Waterfront)
- 16 ஜனவரி 2027 – கோர்ஃபக்கான் பீச் (Khorfakkan Beach)
பார்வையாளர்களுக்கான முக்கிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்
நிகழ்வு சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற அமைப்பாளர்கள் சில முக்கிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளனர்:
- பார்வையாளர்கள் தங்களது கார்களை நேரடியாகக் கொண்டுவந்து காட்சிப்படுத்தவோ அல்லது பதிவு செய்யவோ முடியாது.
- கார்களைக் காட்சிப்படுத்த விரும்புபவர்கள் ‘UAE Car Clubs’ அமைப்பை அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் (@ucc.uae).
- பார்வையாளர்கள் அனைவரும் அரங்கம், அமைப்பாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
- குழந்தைகளை எப்போதும் பெரியவர்கள் தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.
- காட்சிப்படுத்தப்பட்டுள்ள கார்களை அனுமதி இன்றி தொடவோ அல்லது அதற்குள் ஏறவோ கூடாது.
- நிகழ்வின் போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் செய்யப்படும்.
- தேவைப்பட்டால் நிகழ்வின் நேரங்கள் மற்றும் நடவடிக்கைகளில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
- பொதுமக்கள் தங்கள் கார்களை நேரடியாக இந்த நிகழ்வுக்குக் கொண்டுவர முடியாது.
- வாகனங்களைக் காட்சிப்படுத்த விரும்புபவர்கள் ‘UAE Car Clubs’ அமைப்பை அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் வழியாகத் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம்.
- மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பைக்குகளுக்கு இந்த நிகழ்வில் அனுமதி இல்லை.
- அதேவேளையில், பொதுமக்கள் அனைவரும் இலவசமாக வருகை தந்து இந்நிகழ்வைக் கண்டு மகிழலாம்.
- குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் கார் பிரியர்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழும் வகையில் குடும்ப அமைப்பில் இந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பார்வையாளர்கள் காட்சிப்படுத்தப்பட்ட வாகனங்களுக்கும் பிறருக்கும் இடையூறு இல்லாத வகையில் தாராளமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
- மேலும், நிகழ்விடங்களில் சுவாரசியமான நேரலை பொழுதுபோக்கு அம்சங்களுடன், அல் கஸ்பா (Al Qasba) பகுதியில் விதவிதமான உணவு வசதிகளும் பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன.
