துபாயில் Shared Housing முறைக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளின் முழுமையான பட்டியலை துபாய் நகராட்சி வெளியிட்டுள்ளது.
உள்ளடக்கம்
துபாயில் வீடுகளைப் பகிர்ந்துகொண்டு தங்கும் (Shared Housing) முறைக்கு அனுமதிக்கப்பட்ட 44-க்கும் மேற்பட்ட பகுதிகளின் முழுமையான பட்டியலை துபாய் நகராட்சி வெளியிட்டுள்ளது.
நகரில் மக்கள் நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் குறிப்பிட்ட எல்லைகளுக்குள்ளும், சில பகுதிகளில் பகுதி முழுவதும் Shared Housing முறையில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Shared Housing முறைக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளின் முழுப் பட்டியல்
1. குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் அனுமதி
கீழ்கண்ட பகுதிகளில் குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே Shared Housing முறையில் தங்க அனுமதி உண்டு.
- அபு ஹைல் (Abu Hail)
- அல் பராஹா (Al Baraha)
- அல் ஹம்ரியா (Al Hamriya)
- மன்கூல் (Mankhool)
- அல் ஜாஃபிலியா (Al Jaffiliya)
- அல் ஹுதைபியா (Al Hudaibiya)
- அல் சத்வா (Al Satwa)
- போர்ட் சயீத் (Port Saeed)
- ஹோர் அல் அன்ஸ் கிழக்கு (Hor Al Anz East)
- அல் மம்சார் (Al Mamzar)
- அல் குஸைஸ் தொழிற்பேட்டை மண்டலங்கள் 1, 2, 3, 4, 5 (Al Qusais Industrial Area 1, 2, 3, 4, 5)
2. பகுதி முழுவதும் அனுமதி
கீழ்கண்ட பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் Shared Housing முறையில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- அல் ராஸ் (Al Ras)
- அல் தகாதா – டீரா (Al Dhagata)
- அல் பதீன் (Al Bateen)
- சப்கா (Sabkha)
- இயல் நாசர் (Eyal Nasser)
- அல் முரார் (Al Murar)
- நைஃப் (Naif)
- அல் ரிக்கா (Al Rigga)
- அல் முத்தீனா (Al Muteena)
- அல் முரக்கபாத் (Al Muraqqabat)
- ரிக்கா அல் பதீன் – துபாய் கிரீக் அருகில் (Riqqa Al Bateen)
- ஹோர் அல் அன்ஸ் (Hor Al Anz)
- அல் வஹீதா (Al Waheeda)
- அல் ரஷிதியா (Al Rashidiya)
- அல் நஹ்தா 1 & 2 (Al Nahda 1 & 2)
- அல் குஸைஸ் (Al Qusais)
- அல் த்வார் 5 (Al Twar 5)
- முஹைஸ்னா 4 (Muhaisnah 4)
- அல் சூக் அல் கபீர் (Souq Kabeer)
- உம் ஹுரைர் 1 & 2 (Umm Hurair 1 & 2)
- அல் ரஃபா (Al Rafa)
- அல் கராமா (Karama)
- ஊத் மேத்தா (Oud Metha)
- ஜூமேரா 1 (Jumeirah 1)
- அல் பதா (Al Badaa)
- அல் பர்ஷா 1 (Al Barsha 1)
- அல் வர்கா 1 (Al Warqa 1)
