எதிஹாட் ரயில் பயணிகள் ரயில் சேவை ஜூன் 30 முதல் தொடங்கவுள்ள நிலையில், ரயில் நிலையத்திற்கு எளிதாக வந்து செல்ல அதிகாரப்பூர்வ Shuttle பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பார்க்கிங் அல்லது போக்குவரத்து நெரிசல் குறித்து கவலைப்படாமல் ரயில் நிலையத்தை எளிதாக அடைய முடியும்.
AED 10 கட்டணத்தில் Shuttle பேருந்து
அபுதாபியில் உள்ள Mohamed Bin Zayed City ரயில் நிலையத்திற்கு AED10 கட்டணத்தில் Shuttle பேருந்து சேவை இயக்கப்படுகிறது. இந்த சேவையை எதிஹாட் ரயில் இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3 முக்கிய இடங்களுக்கு நேரடி இணைப்பு
Shuttle பேருந்து சேவை தற்போது அபுதாபியின் மூன்று முக்கிய பகுதிகளை ரயில் நிலையத்துடன் இணைக்கிறது.
– ADNOC Headquarters (Corniche Road West)
– ADNEC Centre (அல் காலீஜ்)
– ரீம் மால் (அல் ரீம் தீவு)
இதன் மூலம் அலுவலகம், வணிக மையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பயணிகள் நேரடியாக ரயில் நிலையத்தை அடையலாம்.
காலை, மதியம், மாலை என 3 சேவைகள்
ஒவ்வொரு வழித்தடத்திலும் தினமும் காலை, மதியம், மாலை என மூன்று முறை இந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ADNOC Headquarters – MBZ Station
– 7:14 AM – 7:59 AM
– 12:48 PM – 1:33 PM
– 5:34 PM – 6:19 PM
ADNEC Centre – MBZ Station
– 7:29 AM – 7:59 AM
– 1:03 PM – 1:33 PM
– 5:49 PM – 6:19 PM
Reem Mall – MBZ Station
– 7:04 AM – 7:59 AM
– 12:38 PM – 1:33 PM
– 5:24 PM – 6:19 PM
ரயில் நிலையத்திலிருந்து திரும்பும் சேவைகள்
ரயிலில் வந்த பயணிகளுக்காக நிலையத்திலிருந்தும் Shuttle Bus இயக்கப்படுகிறது.
MBZ Station – ADNOC Headquarters
– 8:05 AM – 8:50 AM
– 1:18 PM – 2:03 PM
– 7:47 PM – 8:32 PM
MBZ Station – ADNEC Centre
– 8:05 AM – 8:35 AM
– 1:18 PM – 1:48 PM
– 7:47 PM – 8:17 PM
MBZ Station – Reem Mall
– 8:14 AM – 9:00 AM
– 1:18 PM – 2:13 PM
– 7:47 PM – 8:42 PM
இந்த Shuttle Bus சேவையின் சிறப்பம்சங்கள்
பயணிகளின் வசதிக்காக, அபுதாபியின் முக்கிய இடங்களில் இருந்து ரயில் நிலையத்திற்கு நேரடி Shuttle பேருந்து சேவை இயக்கப்படுகிறது. இதன் மூலம் பார்க்கிங் அல்லது மாற்றுப் போக்குவரத்து பற்றி கவலையின்றி, மேலும் இந்த சேவையை எதிஹாட் ரயில் செயலி மற்றும் இணையதளம் வழியாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
எதிஹாட் ரயில் இந்த Shuttle பேருந்து சேவை, ரயில் பயணத்தை மட்டுமல்லாமல், வீட்டிலிருந்து இறுதி இலக்கு வரை தடையற்ற மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புஜைரா நிலையத்தில் கூடுதல் வசதிகள்
புஜைரா ரயில் நிலையத்தில் சேவை தொடங்கும் முதல் நாளிலிருந்தே Rental Car Desk, டாக்ஸி, e-hailing pickup மற்றும் பேருந்து இணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் மேலும் பல வாடகை கார் நிறுவனங்களும் இணைக்கப்பட உள்ளதாக எதிஹாட் ரயில்வே தெரிவித்துள்ளது.
