வெறும் AED 10-க்கு உணவு வழங்கும் சிறப்பு சலுகை
துபாயில் உள்ள 170-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் சில குறிப்பிட்ட உணவு வகைகளை AED 10-க்கு கொடுக்கும் 10 Dirham Dish சிறப்பு சலுகை தொடங்கப்படவுள்ளது.
துபாயின் பிரபல கோடைகால திருவிழாவான ‘துபாய் சம்மர் சர்ப்ரைசஸ்’ (Dubai Summer Surprises) பகுதியாக இந்த 10 Dirham Dish சலுகை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 30 வரை இந்த சிறப்பு ஆஃபர் அமலில் இருக்கும்.
இதில் பங்கேற்கும் துபாய் முழுவதும் உள்ள 173 உணவகங்கள் மற்றும் கஃபேக்களின் (Cafés) 700-க்கும் மேற்பட்ட கிளைகளில் இது கிடைக்கும். பங்கேற்கும் ஒவ்வொரு உணவகமும் ஒரு குறிப்பிட்ட சுவையான உணவையோ (Savoury dish) அல்லது இனிப்பு வகையையோ (Dessert) வெறும் AED 10-க்கு வழங்கும்.
பங்கேற்கும் உணவகங்கள் மற்றும் உணவுகளின் முழு பட்டியலையும் ‘District by Zomato’ செயலியில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
Guggenheim Abu Dhabi அருங்காட்சியகம் திறப்பு தேதி அறிவிப்பு
அபுதாபியின் Saadiyat Cultural District-ல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் Guggenheim Abu Dhabi அருங்காட்சியகம், இந்த ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஸ்பெயினைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற Guggenheim அருங்காட்சியகம் அமீரகத்திலும் திறக்கப்படவுள்ளது.
அபுதாபியின் Saadiyat Cultural District பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், வரும் டிசம்பர் 11-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டம் முதன்முதலில் 2006-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.
புர்ஜ் கலிஃபாவில் UPI மூலம் டிக்கெட் புக் பண்ணலாம்
இந்திய பயணிகள் இனி துபாய்க்கு வருவதற்கு முன்பே, புர்ஜ் கலிஃபாவின் ‘At The Top‘ டிக்கெட்டுகளை ஆன்லைனில் UPI மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புர்ஜ் கலிஃபாவின் ‘At the Top’ டிக்கெட்டுகளை, இந்தியர்கள் UPI மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்து பணம் செலுத்தலாம். இதன் மூலம் டிக்கெட் பதிவு செய்வது இந்திய பயணிகளுக்கு மேலும் எளிதாகிறது.
ஆன்லைன் UPI கட்டணத்தை ஏற்கும் அமீரகத்தின் முதல் சுற்றுலா தளமாக ‘At the Top, Burj Khalifa’ மாறியுள்ளது. இந்த வசதி NEOPAY, NPCI International (NIPL) மற்றும் Emaar Entertainment இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
பயணத்திற்கு முன்பே, தங்களுக்கு பழக்கமான UPI செயலிகள் மூலம் டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு மணி நேரத்தில் 100 விண்கற்கள் விழும் அற்புத காட்சி
ஆண்டின் மிக அழகான வானியல் நிகழ்வுகளில் ஒன்றான ‘Perseids Meteor Shower‘-ஐ காண, ஆகஸ்ட் 13-ம் தேதி ஷார்ஜாவின் Mleiha National Park சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை காண முன்பதிவு அவசியம்.
ஆகஸ்ட் 13 அன்று மாலை 6.30 மணி முதல் இரவு 1 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், வானியல் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் விண்கல் மழையை ரசிக்கலாம். தொலைநோக்கி மூலம் கோள்களை பார்வையிடுதல், வானியல் விளக்க நிகழ்ச்சி, பாலைவன இரவு விருந்து, விண்கல் மழை கண்காணிப்பு உள்ளிட்ட பல அனுபவங்கள் இடம்பெறவுள்ளன.
4 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.
டிக்கெட் கட்டணம் விவரம்!
Premium Experience
பெரியவர்கள்: AED 300
குழந்தைகள்: AED 250
Standard Experience
பெரியவர்கள்: AED 225
குழந்தைகள்: AED 175
முன்பதிவு மற்றும் முழு விவரங்களுக்கு: www.mleihanationalpark.com
பூனைகளுக்கு உணவளிக்க நன்கொடை வழங்கலாம்
துபாயில் உள்ள தெரு பூனைகளுக்கு உணவு வழங்க, DubaiNow மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் நிதியுதவி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி, துபாய் முழுவதும் உள்ள Smart Feeding Stations வழியாக பூனைகளுக்கு உணவு வழங்க பயன்படுத்தப்படும்.
Digital Dubai மற்றும் முகமது பின் ரஷீத் உலகளாவிய அறக்கட்டளை ஆலோசனையகம் இணைந்து, துபாயில் உள்ள தெரு பூனைகளுக்கு உணவு வழங்குவதற்காக DubaiNow மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் நிதியுதவி செய்யும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக, DubaiNow செயலியில் உள்ள Ehsan Feeding Stations சேவையைத் தேர்வு செய்து, AED 10 முதல் விருப்பமான தொகையை நன்கொடையாக வழங்கலாம். நன்கொடை செலுத்தியதும், அது பெறப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் SMS பயனருக்கு அனுப்பப்படும்.
