வாடகை செலுத்த முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு உதவ AED 10 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

துபாயில் வீட்டு வாடகை செலுத்த முடியாத 232 எமிராட்டி குடும்பங்களின் வாடகை செலவுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில், முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறக்கட்டளை ‘Stir’ என்ற புதிய முயற்சியை தொடங்கி, இதற்காக 10 மில்லியன் தொகையை ஒதுக்கியுள்ளது.

திட்டத்தின் நோக்கம்:

ஆட்சியாளர்களின் வழிகாட்டுதலின்படி, 2026-ம் ஆண்டு ‘குடும்பங்களின் ஆண்டு’ ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், வாடகை பாக்கியால்  சட்ட சிக்கலில் சிக்கியுள்ள எமிராட்டி குடும்பங்களைக் காப்பாற்ற AED 10 மில்லியன்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

யார் பயனடைவார்கள்?

இந்தத் திட்டத்தின் மூலம் கீழ்க்கண்ட உதவிகள் வழங்கப்படும்:

வாடகை செலுத்தாததால் சிறையில் இருக்கும் 111 நபர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

வாடகை தொடர்பான 187 சட்ட வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

கஷ்டப்படும் 232 தகுதியுள்ள குடும்பங்களுக்கு நேரடி நிதி உதவி வழங்கப்படும்.

ஏன் இந்தத் திட்டம்?

கடந்த நான்கு ஆண்டுகளாக துபாயில் வாடகை வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை வாடகைக்கே செலவிட வேண்டியுள்ளது. இக்கட்டான சூழலில் இருக்கும் குடும்பங்களுக்கு நிம்மதி அளிக்கவும், சமூக ஒற்றுமையை பலப்படுத்தவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

உதவி பெறுவது எப்படி?

துபாய் வாடகை தகராறு மையம் (RDC) மற்றும் முகமது பின் ரஷித் அறக்கட்டளை இணைந்து பயனாளர்களைத் தேர்வு செய்யும்.

குடும்பத்தின் உண்மையான நிதி நிலைமை, தற்போதைய வருமானம், 

இதற்கு முன் சரியாக வாடகை செலுத்திய விவரம் போன்றவற்றை நேர்மையான முறையில் ஆய்வு செய்து, மிகவும் தேவையுள்ள குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படும்.

TAGGED: