துபாயில் கோடைக்காலத்தில் வாகனப் புகார்களைத் தவிர்க்கவும், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும் துபாய் காவல்துறை மற்றும் ENOC AutoPro இணைந்து “விபத்துக்கள் இல்லாத கோடை 2026” என்ற இலவச வாகனப் பரிசோதனை முகாமையைத் தொடங்கியுள்ளன.
இலவச வாகனப் பரிசோதனை
துபாயில் கோடைக்கால வெப்பத்தினால் ஏற்படும் வாகன விபத்துகள் மற்றும் பழுதுகளைத் தவிர்க்க, துபாய் காவல்துறையும், ENOC AutoPro நிறுவனமும் இணைந்து “விபத்தில்லா கோடைக்காலம் 2026” (Summer Without Accidents 2026) என்ற பிரச்சாரத்தினை தொடங்கியுள்ளன.
இதன் மூலம் ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 23, 2026 வரை இலவச வாகனப் பரிசோதனை முகாமினை நடத்தி வருகின்றன. ENOC பெட்ரோல் பங்குகளில் அமைந்துள்ள AutoPro பராமரிப்பு மையங்கள் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். 10 முக்கிய பாதுகாப்புப் பரிசோதனைகள் இதில் அடங்கும்.
கோடைக்காலத்தில் வாகனப் பரிசோதனை ஏன் அவசியம்?
ஐக்கிய அரபு அமீரகத்தின் கடும் கோடை வெப்பம் வாகனங்களின் பாகங்களை எளிதில் சேதப்படுத்தக்கூடும். குளிர் காலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத சிறு பழுதுகள் கூட, கோடை வெப்பத்தின் காரணமாக உடனடியாக பெரிய விபத்துக்கோ அல்லது வாகனப் பழுதுக்கோ வழிவகுக்கும்.
பரிசோதிக்கப்படும் 10 முக்கிய பாகங்களும் அவற்றின் முக்கியத்துவமும்
டயர்கள்: வெப்பமான சாலைகளில் வாகனம் செல்லும்போது டயர் வெடிப்பு (Blowout) ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. டயரின் அழுத்தம் மற்றும் தேய்மானத்தை சரிபார்ப்பது அவசியம்.
பேட்டரி: அதிக வெப்பம் பேட்டரியின் ஆயுளை வேகமாகக் குறைக்கும். இதனால் வாகனம் திடீரென வழியில் நின்றுவிட வாய்ப்புள்ளது.
எஞ்சின் கூலிங் சிஸ்டம் (Engine Cooling System): கூலண்ட் (Coolant) அளவு, ரேடியேட்டர், ஹோஸ் பைப்புகள் (Hoses) மற்றும் கூலிங் ஃபேன் ஆகியவை சரியாக வேலை செய்யாவிட்டால் எஞ்சின் அதிக வெப்பமடைந்து பழுதாகிவிடும்.
பிரேக் சிஸ்டம் (Brakes): வெப்பம் மற்றும் தொடர்ச்சியான பிரேக் பயன்பாடு காரணமாக பிரேக் பேடுகள் விரைவில் தேய்மானமடையும்.
ஏர் கண்டிஷனர் (Air-Conditioning): கடும் வெயிலில் ஏசி செயல்படாவிட்டால் வாகனத்தினுள் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம்.
ஆயில் மற்றும் பிற திரவங்கள் (Fluids, Belts & Hoses): எஞ்சின் ஆயில், பிரேக் ஆயில், பெல்ட்கள் மற்றும் ரப்பர் ஹோஸ் பைப்புகள் வெப்பத்தினால் விரைவாக தன்மையை இழந்துவிடும்.
