பிராந்தியத்தில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், அமீரக அதிபர் குவைத்துக்கு நட்புறவு பயணம் மேற்கொண்டார்.
அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜூலை 9ஆம் தேதி குவைத் நாட்டிற்கு நட்புறவுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக அதிபர் மற்றும் உயர்மட்டக் குழுவினர் குவைத் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, அவர்களை குவைத் அமீர் மாண்புமிகு ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் நேரில் வரவேற்றார். அப்போது குவைத் இளவரசர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரும் உடனிருந்தனர்.
அமீரக அதிபருடன், அமீரக துணை அதிபர் மாண்புமிகு ஷேக் மன்சூர் பின் சயீத் அவர்கள், உள்துறை அமைச்சர் மாண்புமிகு ஷேக் சைஃப் பின் சயீத் அவர்கள் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளும் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர்.
