Etisalat வாடிக்கையாளர்களுக்கு Offer முதல் Shared Housing புதிய விதிமுறைகள் வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

ஆசிரியருக்கு வழங்கிய போட்டோ வழங்கிய அதிபர் 

அக்.5 உலக ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு, அமீரக அதிபர் தனது சிறுவயது ஆசிரியரான அகமது இப்ராஹிம் மண்டி என்பவருக்கு வழங்கிய தனது பழைய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 1971ல் கையெழுத்திடப்பட்ட அந்தப் புகைப்படத்தில், “என்னை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று தனது ஆசிரியருக்கு எழுதியுள்ளார்.

எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப தங்களை உயர்த்திக் கொள்ளும், தன்னம்பிக்கை மற்றும் சுய அடையாளம் கொண்ட தலைமுறைகளை உருவாக்குவது ஆசிரியர்களின் புனிதமான கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அமீரகத்தின் கல்வி தொலைநோக்கு பார்வையை அடைவதிலும், நாட்டின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதிலும் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என்று கூறி, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

எலும்புக் கூடுகளுக்கு வச்சா பரிசு 

அபுதாபியின் Natural History அருங்காட்சியகத்தில் உள்ள Blue Whale மற்றும் T.rex Dinosaur எலும்புக் கூடுகளுக்கு பெயர் சூட்டும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் பெயர்கள் அருங்காட்சியகத்தில் இடம்பெறுவதுடன், வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும். nhmad.ae என்ற இணையதளம் மூலம் யார் வேண்டுமானாலும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

18 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 25. 

பெயர் தேர்வு: அரபிக் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் அர்த்தமுள்ள, அறிவியல்/வரலாற்றுச் சிறப்புமிக்க பெயர்களுக்கு முன்னுரிமை.

நவம்பரில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு சிறப்புப் பரிசு வழங்கப்படும்.

பதிவு & முழு விவரம்: https://www.nhmad.ae/en/name-two-giants

Etisalat வாடிக்கையாளர்களுக்கு Offer 

50வது ஆண்டு விழாவை முன்னிட்டு, Etisalat நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும், 2022ல் ‘e&’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்நிறுவனம் தற்போது மீண்டும் பழைய ‘etisalat’ என்ற பெயருக்கே மாறுவதாக அறிவித்துள்ளது.

இலவச டேட்டா:

வாடிக்கையாளர்கள் etisalat நிறுவனத்துடன் இணைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறதோ, ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 1 GB இலவச டேட்டா வழங்கப்படும்.

இந்த இலவச டேட்டாவை வரும் அக்.13ம் தேதி வரை 1 வார காலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Roaming சலுகைகள்:

 வாராந்திர Roaming காம்போ பேக்கில் 2.5 GBக்கு பதிலாக 5 GB டேட்டாவும், 500 ரோமிங் நிமிடங்களும் வழங்கப்படும்.

 இச்சலுகையை வரும் அக்.9ம் தேதிக்குள் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அக்.10ம் தேதி முதல் பழைய சலுகைகளே அமலில் இருக்கும்.

மேலும் பல சலுகைகள்:

எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு 90% வரை தள்ளுபடி.

Postpaid பயனர்களுக்கு 5 மடங்கு கூடுதல் டேட்டா.

10க்கும் மேற்பட்ட சிறப்பு Packages அறிமுகம்.

வழக்கமாக 10 GB டேட்டா தரும் AED 200 (30 Days Validity) Package, ஒரு முறை மட்டும் 50 GB டேட்டாவாக வழங்கப்படும்.

Shared Housing புதிய விதிமுறைகள் 

Shared Housing முறைக்கு துபாய் நகராட்சியின் புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Shared Housing குடியிருப்பை, Bachelors அல்லது குடும்பங்களுக்கு (ஏதாவது ஒரு பிரிவினருக்கு) ஒதுக்க வேண்டும். இரு பிரிவினரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ அனுமதி இல்லை.

படுக்கையறையில் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 5 சதுர மீட்டர் இடம் கட்டாயம் இருக்க வேண்டும்.

4 பேருக்கு ஒரு கழிப்பறை வசதி கட்டாயம்.

Baniyas Road, Sheikh Zayed Road, Jumeirah Road மற்றும் Al Wasl Road ஆகிய பகுதிகளில் Bachelors Shared Housing முறைப்படி தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு, குடும்பங்கள் மட்டுமே Shared Housing முறைப்படி தங்க அனுமதி உண்டு

உரிமையாளர்கள் தங்களின் குடியிருப்புகளை புதிய விதிகளுக்கு ஏற்ப வரும் 2027 செப்.8ம் தேதிக்குள் மாற்றியமைக்க வேண்டும்.

இந்த விதிகளை மீறுபவர்களுக்கு AED 500 முதல் AED 500,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

துபாயில்  Shared Housing முறைக்கு சில பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் மட்டுமே Shared Housing முறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள பகுதிகள்


Abu Hail

Al Baraha

Al Hamriya

Mankhool

Al Jaffiliya

Al Hudaibiya

Al Satwa

Port Saeed

Hor Al Anz East

Al Mamzar

Al Qusais Industrial Area 1, 2, 3, 4, 5

அனைத்து இடங்களிலுமே Shared Housing முறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள பகுதிகள்

Al Ras

Al Dhagata – Deira

Al Bateen

Sabkha

Eyal Nasser

Al Murar

Naif

Al Rigga

Al Muteena

Al Muraqqabat

Riqqa Al Bateen 

Hor Al Anz

Al Waheeda

Al Rashidiya

Al Nahda 1

Qusais

Al Twar 5

Al Nahda 2

Muhaisnah 4

Souq Kabeer

Umm Hurair 1 & 2

Al Rafa

Karama

Oud Metha

Jumeirah 1

Al Badaa

Barsha 1

Al Warqa 1

ஜெயிச்சா AED 550,000 பரிசு

‘Create AI Agents Championship’ என்ற உலகளாவிய AI போட்டியை, துபாய் இளவரசர் அறிவித்துள்ளார். தொழில்நுட்பப் பின்னணி உள்ளவர்கள், இல்லாதவர்கள் என உலகம் முழுவதும் உள்ள அனைவரும் பங்கேற்கலாம். மொத்தமாக AED 2.5 மில்லியன் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளன.

Best Societal AI Agent, Best Personal AI Agent, Best Business AI Agent, Best Youth AI Agent என ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவருக்கு AED 550,000 வழங்கப்படும். 4 வெற்றியாளர்களில் ஒருவருக்கு ‘AI Agent of the Year’ என்ற சிறப்புப் பட்டத்துடன், கூடுதல் பரிசாக AED 1 மில்லியன் வழங்கப்படும். 

பங்கேற்க: https://www.dubaichamberdigital.com/en/create-ai-agents

TAGGED: